ரத்தம் சொட்டிய முகம்.. ஷூ கூட இல்லாமல் வெளியே வந்த ராகுல் காந்தி! பிரதமர் இல்லம் முன் நடந்தது என்ன?

  • டெல்லி: நீட் விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடந்து வரும் போராட்டம் நாளுக்கு நாள் பெரிதாக வெடித்து வருகிறது. நேற்றைய தினம் யாருமே எதிர்பார்க்காத வகையில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்ட களத்தில் குதித்தனர். அப்போது பிரதமர் இல்லம் அருகே மிக பெரிய களேபரமே நடந்தது. ராகுலின் இந்த போராட்டம் தேசியளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    Advertisement

    நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஒரு பக்கம் மாணவர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டங்களை நடத்தி வரும் சூழலில், இன்னொரு பக்கம் அரசியல் கட்சிகளும் நேற்றைய தினம் போராட்ட களத்தில் குதித்தன.

    Advertisement

    போராட்டம்

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை நோக்கி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கரப்பான் பூச்சி கட்சி நடத்திய மாணவர் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய தடியடி நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், நீட் வினாத்தாள் லீக் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

    இதன் மூலம் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் இப்போது காங்கிரஸ் - பாஜக இடையேயான நேரடி அரசியல் மோதலாக மாறியுள்ளது. நாடாளுமன்றத்திலும் கூட ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சியினர் இதை முன்வைத்தே அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடந்த இரு நாட்களாக அவை நிகழ்வுகள் முழுமையாக ஒத்திவைக்கப்பட்டே வருகிறது.

    Advertisement

    ரத்தம் கொட்டியது

    நேற்றைய தினம் ராகுல் காந்தியின் போராட்டம் தேசியளவில் கவனம் பெற்றதாக இருந்தது. நேற்று பிற்பகலில் ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென பிரதமர் இல்லத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கட்டத்தில் ராகுல் காந்தி அங்கு சாலையிலேயே படுத்துக் கொண்டார். போலீசார் அவரை கைது செய்ய முயன்றபோது, அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் கடுமையாக நடந்து கொண்டதால் ராகுல் காந்தியின் கண் அருகிலும் மூக்கிலும் ரத்தம் கொட்டியது.

    நீண்ட தள்ளுமுள்ளுக்கு பிறகே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். பல மணி நேரம் கழித்து இரவு தான் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மந்திர் மார்க் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அப்போது காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி திடீரென போலீஸ் நிலையத்திற்கு நேரடியாகவே சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Advertisement

    ஷூ இல்லை

    இந்த தள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தியின் ஒரு ஷூ எங்கோ போய் விட்டது. ரிலீஸ் செய்த பிறகும் அவர் ஒரு காலில் மட்டுமே ஷூ அணிந்திருந்தார். மற்றொரு காலில் ஷூ அணியாமலேயே நடந்து சென்றார். இது தொடர்பான வீடியோக்களையும் காங்கிரஸ் பகிர்ந்துள்ளது. மேலும், இரவு தடுப்பு காவலில் இருந்து ரிலீஸ் ஆன கையோடு தங்கள் போராட்டம் குறித்து ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    ராகுல் விளக்கம்

    அதில் அவர், "மக்களவையில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி கோரி சபாநாயகரை சந்தித்தோம். ஆனால் மத்திய அரசு விவாதம் நடத்த விரும்பவில்லை என்பது தெளிவானதால், பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்தோம். இந்திய கல்வி முறை ஏன் சீர்குலைகிறது? ஏன் தொடர்ந்து வினாத்தாள்கள் லீக் ஆகிறது? ஏன் கல்வி காஸ்ட்லியாக மாறுகிறது? குழந்தைகளை படிக்க வைக்க குடும்பங்கள் ஏன் சிரமப்பட வேண்டும்? இந்த கேள்விகளை இளைஞர்கள் கேட்பதில் எந்த தவறும் இல்லை" என்றார்.

    English Summary

    Congress leader Rahul Gandhi suffered minor injuries during a scuffle with Delhi Police(ராகுல் காந்தி டெலிலியில் மிக பெரிய போராட்டம்): Rahul Gandhi Injured amid Delhi protest.