டெல்லி: அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் தொடர்புடைய துஷ்யந்த் கவுதம் சிக்கிம் ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிதா பண்டாரியின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், டெல்லி இந்தியா கேட் பகுதியில் அவர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், 2022ஆம் ஆண்டு விடுதி வரவேற்பாளர் அங்கிதா பண்டாரி கொலை வழக்கில், அவரது பெற்றோர் குற்றம்சாட்டும் முன்னாள் பாஜக பொறுப்பாளர் துஷ்யந்த் கவுதமை சிக்கிம் ஆளுநராக நியமித்திருப்பதற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள விடுதி ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தவர் அங்கிதா பண்டாரி. இவர் 2022ஆம் ஆண்டு ஒரு கால்வாயில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவரது கொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் தற்போதைய சிக்கிம் ஆளுநர் துஷ்யந்த் கவுதமுக்கும் தொடர்பு இருப்பதாக அங்கிதா பண்டாரியின் பெற்றோர் குற்றஞ்சாட்டிவருகின்றனர். இந்நிலையில், துஷ்யந்த் கவுதம் தற்போது சிக்கிம் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு அங்கிதா பண்டாரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆளுநருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொலை வழக்கில் தொடர்புடைய துஷ்யந்தை ஆளுநராக நியமித்ததற்கு எதிராக டெல்லி இந்தியா கேட் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி இந்தியா கேட் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அங்கிதா பண்டாரியின் பெற்றோரை இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார். ராகுல் காந்தியுடன் எம்.பி பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் சந்தித்து, அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி அரசு மீது கூறப்படும் தேர்தல் மோசடிக்கு எதிராக, ராகுல் காந்தி ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில், துஷ்யந்த் கௌதம் ஆளுநராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் இந்த விவகாரம் பெரும் கவனம் பெற்றுள்ளது.சரமாரியாக அறைந்த போலீஸ்.. காது கேட்கும் திறனை இழந்த கேரள மாணவி! ராகுல் காந்தி குற்றச்சாட்டு