டெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று சனிக்கிழமை சென்னைக்கு வருகை தந்தார். அதிகாரப்பூர்வமாக மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி என்று அறிவிக்கப்பட்டாலும், அவருடைய வருகையின் முக்கிய நோக்கம் தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்ததுதான்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் நண்பகல் 12.30 மணிக்கு சென்னை வந்தடைந்த ராகுல் காந்தி, நேராக நீலாங்கரையில் உள்ள முதல்வர் விஜய்யின் வீட்டிற்குச் சென்றார். அங்கு இரு தலைவர்களும் மதிய உணவு சாப்பிட்டபடி சுமார் ஒரு மணி நேரம் தனியாகப் பேசினர். பின்னர் இருவரும் அருகிலுள்ள ஒரு பிரபல கஃபேக்குச் சென்று திராமிசு கேக், தேநீர் மற்றும் காபி அருந்தி உரையாடினர்.
மதிய உணவுக்குப் பிறகு, மாலை 5 மணியளவில் சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற 'மாணவர்களின் குரல்' (சத்ரோன் கி கூஞ்ச்) என்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அங்கு பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் கல்விச் செலவு உயர்வு, நீட் தேர்வு முறை, வினாத்தாள் கசிவு மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் குறித்து விரிவாகப் பேசினார். க்யூஆர் (QR) கோடு பதிவு மூலமாக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மதிய உணவு சந்திப்பு எளிதாக நடந்துவிடவில்லை. முன்னதாக இரு தரப்பிலும் சில மனக்கசப்புகள் இருந்தன. தேர்தல் ஆணையத்திற்கு எதிராக டெல்லியில் ராகுல் காந்தி முன்னெடுத்த போராட்டங்கள் மற்றும் அவரது கைது நடவடிக்கைகளுக்கு, முதல்வர் விஜய் வெளிப்படையாக எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. இதனால் அவரைச் சந்திக்க செல்ல வேண்டுமா என்ற கேள்வி காங்கிரஸ் வட்டாரத்தில் எழுந்தது. அதே நேரத்தில், விஜய் தரப்பிலும் இந்த சந்திப்பு கட்டாயத்தின் பேரில் நடப்பது போல் காட்டப்படக்கூடாது என்ற தயக்கம் இருந்தது. ஆனால், இந்த சந்திப்பின் மூலம் புதிய கூட்டணியில் இருந்த சிறிய சலசலப்பு சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும், அதற்குப் பின் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் போதிய உற்சாகம் இல்லை. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ், திமுக கூட்டணியை விட்டு விலகி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்த்தது. தற்போது தமிழகத்தில் மாணிக்கம் தாகூர் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெக தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், ராகுல் மற்றும் விஜய் சந்திப்பு நடைபெற்றுள்ளது. 2029 நாடாளுமன்றத் தேர்தலில் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த தவெகவில் சில குரல்கள் எழுந்தாலும், ராகுல் காந்தியே தங்களின் பிரதமர் வேட்பாளர் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. தமிழகத்தில் விஜய்யும், தேசிய அளவில் ராகுல் காந்தியும் தலைமை வகிக்கும் ஒரு சமநிலையை இக்கூட்டணி பேணி வருகிறது. இந்த சந்திப்பின் நேரம் தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சனிக்கிழமை அன்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் மதிய உணவு சாப்பிட்ட முதல்வர் விஜய், அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) பிரதமர் நரேந்திர மோடியுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டார் பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான 14.64 கி.மீ நீள சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பாதையைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். அப்போது மோடியுடன் இணைந்து முதல்வர் விஜய் பூந்தமல்லியிலிருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். விஜய் முதல்வரான பிறகு பிரதமருடன் கலந்துகொள்ளும் முதல் அரசு நிகழ்ச்சி இதுவாகும். சனிக்கிழமை தேசிய எதிர்க்கட்சித் தலைவருடன் மதிய உணவு, ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பிரதமருடன் மெட்ரோ பயணம் என இந்திய அரசியலின் இரு துருவங்களுடனும் ஒரே நேரத்தில் இணக்கமாகச் செயல்படும் நிலையை விஜய் கையாண்டு வருகிறார். அதே சமயம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாத மதில் மேல் பூனை போல செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். விஜயின் இந்த அரசியல் மூவ் தமிழக அரசியலில் பல விவாதங்களை கிளப்பி உள்ளது.மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி
சந்திப்பில் நிலவிய ஆரம்பக்கட்ட தயக்கம்
கற்பூர நாயகியே கனகவல்லி.. தமிழ் பாடலுடன் வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி! ட்ரெண்டாகும் எல்ஆர் ஈஸ்வரி!
மாறிய அரசியல் சூழல்: திமுக விலகலும் புதிய கூட்டணியும்
“டிராமா முடிஞ்சுபோச்சு.. மோடி கேம் ஓவர்!” - சென்னையில் மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி
24 மணி நேரத்தில் இரு துருவங்கள்: ராகுல் காந்திக்கு பின் மோடி