ராகுல் மனுவில் 14 குறைபாடுகள்.. கோர்ட் கட்டணத்தில் ரூ.220 பற்றாக்குறை.. சுட்டிக்காட்டிய பதிவுத்துறை!

  • டெல்லி: தேர்தல் முறைகேடுகள் மற்றும் SIR நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், நீதிமன்றக் கட்டணத்தில் ரூ.220 பற்றாக்குறை உட்பட 14 குறைபாடுகள் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் (SIR) முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியினர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    Advertisement

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சௌகதா ராய், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி (பவார்) தலைவர் சுப்ரியா சுலே, சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், இந்திய காங்கிரஸ் கட்சியின் டி. ராஜா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. மஹுவா மாஜி, சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் இ.டி. முகமது பஷீர் ஆகியோர் கூட்டாக மனு தாக்கல் செய்துள்ளனர்.

    Advertisement

    வாக்கு திருட்டு மற்றும் வாக்காளர் நீக்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், இந்த எஸ்.ஐ.ஆர் திருத்தப் பணிகளுக்காக ஒரு சுதந்திரமான குழுவை அமைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

    இந்த மனுவில், இந்தியத் தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் எதிர் தரப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். ராகுல் காந்தி சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ். பிரசன்னா நீதிமன்றத்தில் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்தார்.

    Advertisement

    இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கல் செய்துள்ள கூட்டு மனுவில் நீதிமன்றக் கட்டணத்தில் ரூ.220 பற்றாக்குறை உட்பட 14 குறைகள் இருப்பதாக உச்ச நீதிமன்ற பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

    9 மனுதாரர்களிடமிருந்து அங்கீகாரங்கள் விடுபட்டிருப்பதாகவும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அடையாள அட்டையின் தெளிவற்ற நகல் இணைக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

    சில வக்காலத் ஆவணங்களை இணைக்கத் தவறியது, சிறிய Font size, இரண்டு குறிப்பிட்ட ஆவணங்களுக்கு வண்ண நகல்களை சமர்ப்பிக்காதது, மங்கலான அல்லது படிக்க முடியாத எழுத்துகள், விடுபட்ட பக்கங்கள், மற்றும் சில பக்கங்களின் எண்ணிடலில் உள்ள முரண்பாடுகள் தொடர்பான சிக்கல்களையும் உச்ச நீதிமன்ற பதிவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

    Advertisement

    தேர்தல் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். பேரணியின் முடிவில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    English Summary

    A joint petition filed by Congress leader Rahul Gandhi and several opposition leaders against alleged electoral irregularities and SIR of electoral rolls has 14 "defects", the Supreme Court said, including a shortfall of Rs 220 in court fees.