ராகுல் காந்தியின் அடுத்த அதிரடி.. தமிழகத்தில் தீவிரமாகும் காங்கிரஸ் போராட்டம்.. விஜய்க்கு புதிய தலைவலி?

  • டெல்லி: ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக மக்கள் பிரச்சனைகளைத் தீவிரமாக கையில் எடுத்துப் பேசி வருகிறார். குறிப்பாக, வட இந்திய மாநிலங்களில் மாணவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், அரசுத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் தலித் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து களத்தில் இறங்கிப் போராடி வருகிறார்.

    Advertisement

    இளைஞர்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்த போராட்டங்களை, வெறும் வட மாநிலங்களோடு மட்டும் நிறுத்திவிடாமல் நாடு முழுவதும் முன்னெடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

    Advertisement

    அந்த விரிவான திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக, தமிழகத்திலும் மிகப்பெரிய அளவிலான மக்கள் போராட்டங்களைத் தீவிரமாக முன்னெடுக்க ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். தமிழகத்தின் அரசியல் களம் எப்போதும் சமூக நீதி மற்றும் மக்கள் உரிமைப் போராட்டங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இங்கிருந்து ஒரு வலுவான அரசியல் குரலை எழுப்ப காங்கிரஸ் மேலிடம் விரும்புகிறது.

    இந்த போராட்டங்களை முறைப்படி திட்டமிடுவதற்காகவும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களோடு விரிவாகப் பேசுவதற்காகவும் ராகுல் காந்தி தனது நம்பிக்கைக்குரிய பாதுகாப்புச் செயலாளர் பைஜூவை நேரடியாக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார். டெல்லியிலிருந்து சென்னை வந்தடைந்துள்ள பைஜூ, இன்று தமிழக காங்கிரஸின் முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசுகிறார்.

    Advertisement

    ராகுல் காந்தியின் பிளான் என்ன?

    சென்னையில் நடைபெறும் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக, வட மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பொதுத் தேர்வுச் சிக்கல்கள், நீட் போன்ற நுழைவுத்தேர்வுப் பிரச்சனைகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை மற்றும் சமூக உரிமைகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி போராட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.

    போராட்டங்களை எந்தெந்த மாவட்டங்களில் தொடங்குவது, சென்னையை மையப்படுத்தி பெரிய அளவில் மாணவர் மற்றும் இளைஞர் பேரணியை எப்போது நடத்துவது, எந்த தேதியில் களத்தில் இறங்குவது என்பது போன்ற முழு திட்டங்களையும் பைஜூ தமிழக தலைவர்களிடம் கேட்டறிந்து தொகுக்க உள்ளார். தமிழகக் கள நிலவரத்திற்கு ஏற்ப மக்கள் ஆதரவைப் பெறும் வகையில் செயல்திட்டம் இருக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் மேலிடம் தெளிவாக உள்ளது.

    Advertisement

    தலைவர்களுடனான இந்த ஆலோசனையின் முடிவுகள் அனைத்தும் உடனடியாக டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னர், தமிழகத்தில் நடக்கும் போராட்டத்தின் தொடக்க நாளும், இடமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, போராட்டங்களை நேரில் வழிநடத்துவதற்காக ராகுல் காந்தி மிக விரைவில் தமிழகம் வரவுள்ளார். இதனால் தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் தற்போதே புதிய உற்சாகமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு, அடித்தட்டு மக்களின் குரலாக ஒலிக்கும் ராகுல் காந்தியின் இந்த நேரடி தமிழகப் போராட்டக் களம், மாநில அரசியலிலும் புதிய விவாதங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    விஜய்க்கு தலைவலி

    ஆனால் ராகுல் காந்தியின் போராட்டம் மத்திய அரசுக்கு எதிராக இருந்தாலும் அதில் தமிழக அரசுக்கு எதிராக கருத்துக்கள் வைக்கப்படும். அதனால் தமிழக அரசுக்கு அது தலைவலியாக மாறும். முக்கியமாக ஆளும் விஜய் அரசுக்கு தலைவலியாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Rahul Gandhi Tamil Nadu Visit: Congress Plans Huge Youth and Students Protest in Chennai