டெல்லி: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக நாடு முழுவதும் அரசியல் புயல் வீசிக்கொண்டிருக்கிறது. மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் லட்சக்கணக்கான வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாகப் போராடி வருகின்றன.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தில் வாக்கு திருட்டு நடப்பதாகக் கூறி மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த நிலையில், தமிழகத்தில் புதிய அரசியல் சக்தியாக உருவாகி ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகமும, அதன் தலைவர் விஜய்யும் இந்த விவகாரத்தில் காட்டிவரும் நிலைப்பாடு காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்கு எதிராக அகில இந்திய அளவில் காங்கிரஸ் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தன்னாட்சி அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துகிறது என்பது எதிர்க்கட்சிகளின் முக்கியக் குற்றச்சாட்டு. இந்தச் சூழலில், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு, தேர்தல் ஆணையர் மாற்றத்தை ஆதரிக்க மறுத்துள்ளது. "நாங்கள் SIR முறையை கொள்கை ரீதியாக எதிர்க்கிறோம்; ஆனால் ஒரு தனி நபரை, அதாவது தேர்தல் ஆணையரை மாற்றக் கோரும் கவனத்தைத் திசைதிருப்பும் அரசியலை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்" என்று தவெக அமைச்சர் ராஜ்மோகன் பகிரங்கமாக அறிவித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் அரசு மீதோ அல்லது தேர்தல் ஆணையத்தின் தலைமை மீதோ நேரடியாக எந்தவொரு கடுமையான விமர்சனத்தையும் முன்வைக்காமல், விஜய் மௌனம் காத்து வருகிறார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான முக்கிய விவகாரங்களில் தவெக தொடர்ந்து தயக்கம் காட்டுவது ராகுல் காந்திக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணைய விவகாரத்தில் பல மாநிலக் கட்சிகள் பாஜக அரசைக் கடுமையாகத் தாக்கிப் பேசி வருகின்றன. ஆனால் தவெக எடுத்த நிலைப்பாடு, ஏறக்குறைய பாஜகவின் வாதத்திற்கு நெருக்கமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தவெக முற்றிலும் நிராகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் 14 முறை உள்நாட்டு முரண்பாடுகள் எழுந்துள்ளதாகப் பிற ஆணையர்களே சுட்டிக்காட்டிய நிலையிலும், தவெக அரசு மத்திய அரசு மீது நேரடிப் பழி சுமத்தாமல் பொதுவாகப் பேசி ஒதுங்கிக்கொண்டது. இந்த மௌனமும் மென்போக்கும், விஜய் தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராகத் தீவிரமாகச் செயல்படத் தயங்குகிறார் என்ற சந்தேகத்தைக் காங்கிரஸ் தலைவர்களிடையே அதிகப்படுத்தியுள்ளது. திமுகவை நோக்கி நகரும் காங்கிரஸ்: நாடாளுமன்றத்தில் கூட்டுப் போராட்டம் விஜய் தலைமையிலான தவெக இந்த விவகாரத்தில் உறுதியான ஆதரவை அளிக்காததால், ராகுல் காந்தி தனது கவனத்தை மீண்டும் திமுக பக்கம் திருப்பியுள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள திமுக, தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், SIR பணிகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் அதிக பலம் கொண்ட கட்சிகளில் ஒன்றாக இருக்கும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திரட்டி, டெல்லியில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை ஒருங்கிணைக்க ராகுல் காந்தி திட்டமிட்டு வருகிறார். தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவி விலகலைக் கோரும் எதிர்க்கட்சிகளின் தேசிய அளவிலான கூட்டத்திலும் திமுகவின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. தவெக பின்வாங்கிய சூழலில், ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாக்க திமுகவின் எம்பிக்கள்தான் தங்களுக்குச் சரியான களத் துணையாக இருப்பார்கள் என்று காங்கிரஸ் கருதுகிறது. தமிழகத்தில் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்த பிறகும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜனநாயகக் கேள்விகளில் விஜய் ஏன் வெளிப்படையாகப் பேச மறுக்கிறார் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் பொதுவெளியில் முன்வைத்து வருகின்றன. அரசியல் களத்தில் ஒரு பிரச்சனை எழும்போது மக்களின் பக்கம் நின்று உரக்கப் பேசுவதே தலைவரின் அடையாளம் என்று விமர்சனங்கள் வைக்கப்படும் நிலையில், தேர்தல் ஆணைய விவகாரத்தில் விஜய் கடைப்பிடிக்கும் இந்தத் தந்திரமான அமைதி, வரும் நாட்களில் தவெகவுக்குப் பெரும் அரசியல் சவாலாக மாறக்கூடும்.விஜய் மற்றும் தவெக மீது ராகுல் காந்தி அதிருப்தி ஏன்?
தவெகவின் நிலைப்பாடு: நடுநிலையா அல்லது பாஜகவிற்கு ஆதரவா?
தனி நபர் எதிர்ப்பு மறுப்பு:
மத்திய அரசு மீதான மென்மையான போக்கு:
திமுக எம்பிக்களின் பலம்:
கூட்டணி பலம்: