நாட்டின் பலமே இளைஞர்கள்தான்! ஆனா பாருங்க.. அவங்க சக்கர வியூகத்துல மாட்டி இருக்காங்க - ராகுல் காந்தி

  • டெல்லி: சமீபத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இளைஞர்களின் போராட்டம் ஆளும் மத்திய அரசை ஆட்டம் காண வைத்தது. இந்நிலையில், இன்று மாணவர்கள் மத்தியில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.. நாட்டின் பலம் இளைஞர்கள்தான்! ஆனால் அவர்கள் சக்கரவியூகத்தில் சிக்கியிருக்கின்றனர் என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 'மாணவர்களின் முழக்கம்' என்கிற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றிருந்தார். அப்போது அவர் பேசியதாவது, "நாட்டின் 40 கோடி இளைஞர்களே இந்தியாவின் பலம். ஆனால் இந்த மாணவர்கள் அதிக கட்டணத்துடன் கூறிய கல்வி, குறைந்து வரும் வேலை வாய்ப்புகள், வினாத்தாள் லீக் உள்ளிட்ட சக்கரவியூக பிரச்சனையில் சிக்கிக்கொண்டிருக்கின்றனர்.

    Advertisement

    வீட்டில் பெற்றோர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். இறுதியில் என்ன கிடைக்கிறது? ஒரேயொரு சான்றிதழ் மட்டும்தான். படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் இளைஞர்கள் குறித்த டேட்டாக்களை சேகரிக்கின்றன. அதை வைத்து லாபம் பார்க்கின்றன. ஆனால், இதனால் இளைஞர்களுக்கு எந்த பலனும் இல்லை. வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை. இந்நிறுவனங்கள் நிரந்தர வேலை வாய்ப்பை வழங்க தவறுகின்றன" என்று பேசியிருக்கிறார்.

    ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜக பொங்கி எழுந்து கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா இது குறித்து கூறுகையில், "ராகுல் காந்தி உ.பியில் மாணவர்களை சந்திப்பதற்கு பதில்.. காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் ஜார்க்கண்டில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை சந்திக்க போயிருக்கலாம்" என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    வினாத்தாள் கசிவு, வேலைவாய்ப்பு, கல்வி முறையில் நடக்கும் முறைகேடுகள் உள்ளிட்டவற்றிக்கு எதிராக நாடு தழுவிய 40 நாட்கள் பிரச்சாரத்தை காங்கிரஸ் மேற்கொண்டிருக்கிறது. இந்த பிரச்சாரத்தின் ஒரு அங்கமாகத்தான் உ.பியில் மாணவர் நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. முன்னதாக ராஜஸ்தானின் கோட்டா உள்ளிட்ட பகுதிகளிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Rahul Gandhi: A recent protest by young people at Delhi's Jantar Mantar shook the ruling central government. Against this backdrop, while addressing students today, Leader of the Opposition in the Lok Sabha Rahul Gandhi stated that the youth are the nation's strength, yet they are trapped in a Chakravyuha.