திடீரென மாயமான நடிகர் ராஜ் கிரண்! 23 ஆண்டுகளாகியும் நீடிக்கும் மர்மம்!

  • டெல்லி: பாலிவுட் நடிகர் ராஜ் கிரண் கடந்த 2003ம் ஆண்டு மர்மமான முறையில் காணாமல் போனார். 23 ஆண்டுகளாக அவர் எங்கிருக்கிறார்? என்ன செய்துக்கொண்டிருக்கிறார் என்பது குறித்து தெரியாமல் குடும்பத்தினர் தேடி வருகின்றனர்.

    Advertisement

    தற்போது நடிகையும் சமூக ஆர்வலருமான சோமி அலி இந்த மர்மத்தை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வர தீவிரமாக முயன்று வருகிறார். ராஜ் கிரண், கடந்த 1975ம் ஆண்டு வெளியான கர்ஸ், அர்த், பசேரா உள்ளிட்ட படங்கள் மூலம் பாலிவுட் திரைத்துறையில் அறிமுகமானார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். இதுபோக ஆஹட் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

    Advertisement

    1990களின் தொடக்கத்தில், அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவரது திரை வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. பின்னர் 1996ல் சத்ய சாய் பாபாவின் புட்டபர்த்தி ஆசிரமத்திற்குள் ஏணி மூலம் நள்ளிரவில் நுழைய முயன்றதாக ராஜ் கிரண் கைது செய்யப்பட்டு 34 நாட்கள் சிறையில் இருந்தார்.

    இந்த சம்பவத்திற்கு பின்னர், அவர் மும்பை மாசினா மருத்துவமனையின் மனநல வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பரவியதால், பாலிவுட் அவரை புறக்கணித்தது. பின்னர் அவர் தனது சகோதரருடன் அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு 2003ல் மர்மமான முறையில் காணாமல் போனார். 2011ல் நடிகர் ரிஷி கபூர் அமெரிக்காசென்றபோது, ராஜ் கிரண் அட்லாண்டாவில் உள்ள ஒரு மனநல காப்பகத்தில் இருப்பதாக அவரது சகோதாரர் மூலம் தெரிய வந்ததாக கூறியிருந்தர்.

    Advertisement

    அதே நேரத்தில் நியூயார்க்கில் ராஜ் கிரண் டாக்ஸி ஓட்டுநராக பார்க்கப்பட்டதாக நடிகை தீப்தி ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். ஆனால் இதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. சோமி அலி, மறைந்த ரிஷி கபூருக்கு தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக, கடந்த 20 ஆண்டுகளாக தனது சொந்த பணத்தை செலவழித்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் ராஜ் கிரணை தேடி வருகிறார். இருப்பினும் எந்த தகவல்களும் கிடைக்காமல் இருக்கின்றன. ஒரு நடிகரை 23 ஆண்டுகளாக தேடி வருவது பாலிவுட் திரைத்துறையில் இப்போது வரை பேசுபொருளாக உள்ளது.

    English Summary

    Raj Kiran: Bollywood actor Raj Kiran went missing under mysterious circumstances in 2003. For 23 years, his family has been searching for him, unaware of his whereabouts or what he is doing.