டெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்களும், இளைஞர்களும் பேரணி நடத்தி வருகின்றனர். அதேபோல இவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் குரல் கொடுத்து அமளியில் ஈடுபட்டதால்.. இன்று நாள் முழுவதும் நாடாளுமன்றம் முடங்கியிருக்கிறது.
மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவையும் இன்று பிற்பகல் 3 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், தர்மேந்திர பிரதான் அவசர ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே இருப்பதை போலவே, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் கூச்சலும்,குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது. நீட், சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகள், சோனம் வாங்சுக் உடல் நிலை, CJP போராட்டம், வந்தே மாதரம் பாடல் பாதுகாப்பு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா போன்றவற்றை எதிர்த்து எதிர்க்கட்சிகள் எம்பிகள் குரல் கொடுத்தனர். குறிப்பாக நீட் முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மக்களவையின் மையப்பகுதிக்கு வந்து எம்பிக்கள் முழக்கமிட்டனர். இதையடுத்து சமாஜ்வாதி எம்பி டிம்பிள் யாதவ் (அகிலேஷ் யாதவின் மனைவி) எம்பிக்களுடன் சேர்ந்து ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி நடத்த முயன்றார். ஆனால், போலீசார் அவரை தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். அதேபோல வந்தே மாதரம் பாடல் பாதுகாப்பு மசோதாவுக்கும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் மதிய அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்த CJP அமைப்பின் செய்தி தொடர்பாளர்கள், 3 கோரிக்களை முன்வைத்திருக்கின்றனர். டிமாண்ட் இதுதான் 1. நீட், சிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு பொறுப்பு ஏற்று தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் இந்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் உனடடியாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அமைப்பினர் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் அமைத்திருந்து கூடாரங்களை காவல்துறையில் அப்புறப்படுத்தியிருக்கின்றனர். அதேபோல, மாணவர்களையும் கடுமையான தடியடி நடத்தி அங்கிருந்து கலைத்திருக்கின்றனர்.நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது?
எம்பிக்கள் பேரணி
மாநிலங்களவை ஒத்திவைப்பு
2. நீட் விவாகாரத்தில் உயிரிழிந்தவர்களுக்கு நீதி வேண்டும்
3. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும்