மத்திய அரசை பணிய வைத்தவர்.. அக்.,10 கரப்பான்பூச்சி போராட்டத்துக்கு ராகேஷ் தியாகத் ஆதரவு.. யார் இவர்

  • டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் அக்டோபர் 10ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் அறிவித்துள்ளனர். 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தி வெற்றி கண்ட ராகேஷ் திகாயத்தின் விவசாய அமைப்பான பாரதிய கிசான் யூனியன் நாளை மறுநாள் நடக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது கவனம் பெற்றுள்ளது.

    Advertisement

    கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ள இந்த போராட்டத்துக்கு பாரதிய கிசான் யூனியன் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளராக இருக்கும் ராகேஷ் திகாயத் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    அதுமட்டுமின்றி, ''நாளை மறுநாள் டெல்லியில் நடக்கும் போராட்டத்துக்கு ஒவ்வொரு விவசாயிகளும் தங்களின் ஆதரவாளர்களுடன் டெல்லிக்கு வர வேண்டும்'' என்று கோரிக்கை வைத்துள்ளது.

    கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது ராகேஷ் திகாயத், பாரதிய கிசான் யூனியன் என்ற அமைப்பின் தேசிய செய்தி தொடர்பாளராக இருக்கிறார். இவர் கடந்த 2020-2021ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் ஆவார். டெல்லியின் காஜிப்பூர் எல்லையில் ஏராளமான விவசாயிகளை திரட்டி அவர் போராட்டத்தை வழிநடத்தினார்.

    Advertisement

    இவர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்வர். இவரது தந்தை பெயர் மகேந்திர சிங் திகாயத். இவர் தான் பாரதிய கிசான் யூனியனை நிறுவினர். இவரது அண்ணன் நரேஷ் திகாயத் தற்போது பாரதிய கிசான் யூனியன் தலைவராக உள்ளார்.

    ராகேஷ் திகாயத் டெல்லியில் கான்ஸ்டபிளாக பணிக்கு சேர்ந்தார். பிறகு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். 1993-94ம் ஆண்டில் டெல்லியில் அவரது தந்தை மகேந்திர சிங் திகாயத் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ராகேஷ் திகாயத் தனது சப் இன்ஸ்பெக்டர் பதவியை ராஜினாமா செய்து விவசாய இயக்கத்தில் சேர்ந்து செயல்பட தொடங்கினார்.

    English Summary

    Members of the 'Cockroach Janta Party' have announced a protest at Jantar Mantar in Delhi on October 10, demanding the resignation of Chief Election Commissioner Gyanesh Kumar. The Rakesh Tikait BKUnion-the farmers' organization that successfully campaigned for the repeal of the three farm laws-has garnered attention by extending its support to the protest planned by the CJP on October 10.