NEET: மீண்டும் குளறுபடி.. இயற்பியல் வினாத்தாளில் தவறு! கோட்டை விட்ட NTA!

  • டெல்லி: நீட் முறைகேடு புகார்களைத் தொடர்ந்து ஜூன் 21-ம் தேதி நடத்தப்பட்ட நீட் மறுதேர்விலும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக, இயற்பியல் (Physics) வினாத்தாளில் இரண்டு முக்கிய தவறுகள் கண்டறியப்பட்டுள்ளன.

    Advertisement

    மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்து வருகின்றன. முன்னதாக வினாத்தாள் லீக் ஆனதால், மறு தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தியது.

    Advertisement

    இருப்பினும் இந்த தேர்விலும் குளறுபடி ஏற்பட்டிருக்கிறது. அதாவது, இயற்பியல் பாடப்பிரிவில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கொடுக்கப்பட்ட நான்கு விடைகளும் (Options) தவறாக இருந்தன. இதனால் அந்த கேள்வி நீக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தலா 4 போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

    மற்றொரு கேள்விக்கு இரண்டு விடைகள் சரியாக உள்ளன. அந்த இரண்டு விடைகளில் எதனை மாணவர்கள் தேர்வு செய்திருந்தாலும் அவர்களுக்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியைச் சேர்ந்த கல்வி நிபுணர் ஹர்பிரீத் சிங் இது குறித்துக் கூறுகையில், "வெர்னியர் காலிப்பர்ஸ் (Vernier Callipers) தொடர்பான 40-வது கேள்வியில் சரியான விடை 1.6 செ.மீ ஆகும். ஆனால், கொடுக்கப்பட்ட 4 ஆப்ஷன்களிலும் இந்த விடை இல்லை. அதேபோல், மின்காந்த அலைகள் (Electromagnetic waves) தொடர்பான 22-வது கேள்வியில் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு ஆப்ஷன்களுமே சரியாக உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    NTA விதிமுறை

    தேசிய தேர்வு முகமையின் விதிமுறைப்படி, ஒரு கேள்வி தவறாக இருந்தாலோ அல்லது நீக்கப்பட்டாலோ, அந்தத் தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், அவர்கள் அந்த கேள்வியை எதிர்கொண்டாலும் இல்லாவிட்டாலும் 4 மதிப்பெண்கள் போனஸாக வழங்கப்படும்.

    ஏற்கனவே நீட் தேர்வு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில், மறுதேர்விலும் இது போன்ற குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மத்திய கல்வி அமைச்சகமோ அல்லது NTA அமைப்போ இதுவரை அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.

    English Summary

    Re-NEET Blunders: Following the NEET malpractice complaints, irregularities have also come to light in the NEET re-examination conducted on June 21. In particular, two major mistakes were found in the Physics question paper.