இந்தியா டார்கெட்.. தெற்காசியா முழுக்க அல்கொய்தா போட்ட பகீர் பிளான்.. ஐநாவில் இருந்து வந்த வார்னிங்

  • டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 2025 நவம்பர் மாதம் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணி குறித்து ஐநாச பகீர் ரிப்போர்ட்டை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அல்கொய்தாவின் இந்திய பிரிவான AQIS அமைப்பு தான் இந்த தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பதாகவும் தெற்காசியா முழுக்க தனது ஆபரேஷன்களை விரிவுபடுத்தவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் எச்சரிக்கப்படுகிறது.

    Advertisement

    கடந்த 2025 நவம்பர் 10ஆம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர். முதலில் எதிர்பாராத விதமாக நடந்த விபத்து என கருதப்பட்ட நிலையில், விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் அம்பலமாகின.

    Advertisement

    அல்கொய்தா

    இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ நடத்திய விசாரணையில், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் மருத்துவ உதவி பேராசிரியராக இருந்த உமர் உன்-நபி முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். வெடிகுண்டு வெடித்தபோது அவரும் உயிரிழந்தார். மேலும், இந்த தாக்குதலுக்குப் பின்னணியில் அல்கொய்தாவின் இந்திய பிரிவான AQIS அமைப்பால் ஈர்க்கப்பட்ட ஒரு பயங்கரவாத குழு இருந்தது தெரிய வந்தது. அவர்கள் இந்தியாவில் மிக பெரிய பயங்கரவாத சதித்திட்டத்தை தீட்டி இருந்ததும் தெரிய வந்தது.

    ஐநா பாதுகாப்பு குழு

    இந்தச் சூழலில் தான் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கை இந்த தாக்குல் தொடர்பாக சில கூடுதல் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இந்த தாக்குதலுக்கு AQIS தொடர்பு இருப்பதாக இருப்பதை ஐநா பாதுகாப்பு கவுன்சிலும் குறிப்பிட்டுள்ளது. இந்திய துணை கண்டத்தில் செயல்படும் அல்கொய்தா அமைப்பு, கடந்த காலங்களை போல பெரிய குழுக்களாக செயல்படுவதற்கு பதிலாக சிறிய, சிதறிய மற்றும் தனித்தனி குழுக்களாக இயங்கி வருகிறது.

    Advertisement

    இதன் காரணமாக பாதுகாப்பு அமைப்புகளால் அந்த அமைப்பின் செயல்பாடுகளை கண்டறிந்து தடுப்பது கடினமாகும் என கூறப்பட்டுள்ளது. மேலும், AQIS தனது நிதி கட்டமைப்புகளையும் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு பகுதிகளில் AQIS தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், வங்கதேசத்தை பயன்படுத்தி அங்கு புதிய பயங்கரவாத செல்களை உருவாக்கவும் அந்த அமைப்பு முயல்வதாக அந்த ரிப்போர்ட்டில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பெரிய தாக்குதல்

    AQIS அமைப்பு கடந்த சில காலாமாக பெரிய தாக்குதல்களை நடத்தும் திறன்களை இழந்திருந்தது. ஆனால், செங்கோட்டை குண்டுவெடிப்பை வைத்து பார்க்கும்போது, அந்த அமைப்பு மீண்டும் பரிய அளவில் தாக்குதல் நடத்தும் திறனை பெற்றிருப்பதற்கான தெளிவான அறிகுறியாக இருப்பதாக ஐநா மதிப்பிட்டுள்ளது.

    Advertisement

    பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே அதிகரித்து வரும் எல்லை தாண்டிய வன்முறையும் ஐநா தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்புக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஆதரவளிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

    பகீர் தகவல்கள்

    இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பன்னு பகுதியில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை மற்றும் வாகன வெடிகுண்டு தாக்குதல்களுடனும் கூட AQIS தொடர்பு இருப்பதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

    Advertisement

    இந்த காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ இருக்கும் சூழலில், பயங்கரவாத அமைப்புகளும் கூட இப்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது. குறிப்பாக, வெடிகுண்டு தயாரிப்பு மற்றும் தாக்குதலுக்கான டார்கெட்களை தேர்வு செய்வது தொடர்பான விஷயங்களுக்கு தீவிரவாதிகள் ஏஐ டூல்களை பயன்படுத்துவதாக அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், பல மொழிகளை சேர்ந்தவர்களுக்கு மூளைச்சலவை செய்யவும் தீவிரவாதிகள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    UN Security Council report has raised fresh concerns over AQIS its alleged links to the 2025 Red Fort blast in Delhi(டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு): All things to know about Red Fort blast.