இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் உள்பட வெளிநாட்டினருக்கு பாஸ்போர்ட், விசா விதிகள் தளர்வு

  • டெல்லி: இந்தியாவில் வசிக்கும் குறிப்பிட்ட பாகிஸ்தானியர், சிறுபான்மை அகதிகள், இலங்கை தமிழர்கள், திபெத்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு பாஸ்போர்ட், விசா விதிகளை மத்திய அரசு தளர்த்தி உள்ளது. மலேசியா அல்லது சிங்கப்பூர் குடியுரிமை பெற்று, 2009-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு இந்தியா வந்த இந்திய வம்சாவளியினருக்கு விதிகளை தளர்த்தி உள்ளது.

    Advertisement

    மத்திய உள்துறை அமைச்சகம், குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் (விலக்கு) ஆணையில் திருத்தம் செய்து புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. விதிகளில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் வசிக்கும் குறிப்பிட்ட பாகிஸ்தானியர், சிறுபான்மை அகதிகள், இலங்கை தமிழர்கள், திபெத்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு பாஸ்போர்ட், விசா விதிகள் தளர்த்தப்பட்டிருக்கிறது.

    Advertisement

    பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள்

    2009-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி அல்லது அதற்கு முன்பு இந்தியாவில் நிரந்தரமாக வசிக்கும் நோக்கத்துடன் இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானியர்களுக்கு நிலையான பாஸ்போர்ட் புதுப்பித்தல் தேவையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், பாகிஸ்தானால் வழங்கப்பட்ட கணினிமயமாக்கப்பட்ட தேசிய அடையாள அட்டை இல்லாததால் அவர்களால் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முடியாத நிலையில் இருக்க வேண்டும். இதற்கு தகுதி பெற அவர்கள் பாகிஸ்தானில் இருந்த போது திருமணம் செய்திருக்கவோ, அசையா சொத்துகள் வாங்கியிருக்கவோ கூடாது. பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்ல மாட்டோம் என்று உறுதி அளிக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக போலீஸ் அறிக்கை இருக்கவே கூடாது

    Advertisement
    3.5 சென்ட் நிலத்தின பட்டாவுக்கு 1.25 லட்சம் லஞ்சம்.. ஊட்டி விஏஓ கைது.. பின்னணியில் எழும் 5 கேள்விகள்


    சிங்கப்பூர், மலேசியாவில் குடியுரிமை பெற்றவர்கள்

    மலேசியா அல்லது சிங்கப்பூர் குடியுரிமை பெற்று, 2009-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு இந்தியா வந்த இந்திய வம்சாவளியினர். அந்த நாடுகள் அளித்த பாஸ்போர்ட்டுகள் காலாவதி ஆகியிருப்பதுடன், அதை புதுப்பிக்க முடியாதநிலையில் இருக்க வேண்டும். "இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர்" என்பது, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், பூடான், நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் குடிமக்கள் அல்லாத, வெளிநாட்டு குடியுரிமை கொண்ட ஒருவரை குறிக்கும். மேற்கண்ட 3 பிரிவினரும் இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருக்க உரிய விசா பிரிவை பெற வேண்டும்.

    Advertisement

    இந்து, சீக்கியர்களுக்கு விசா விலக்கு

    இந்தியா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளிடையே நிலம் அல்லது ஆகாயமார்க்கமாக நேரடியாக பயணம் செய்யும் மேற்கண்ட நாட்டினர் நிலையான பாஸ்போர்ட்டுக்கு பதிலாக, "விசா மானுவல்" புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடையாள அட்டையை காண்பிக்கலாம். மத வன்முறை காரணமாக அடைக்கலம் தேடி, 2024-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் நுழைந்த ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்து, சீக்கியர், புத்த மதத்தினர், சமண மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கும் பாஸ்போர்ட், விசா விலக்கு பொருந்தும்.

    'சென்னை நங்கநல்லூரில் வேலை செய்தவர் இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர்.. யார் இந்த 'நித்யா ராமன்'?
    Advertisement

    உரிய பாஸ்போர்ட் இல்லாமலோ அல்லது அது காலாவதி ஆகியிருந்தாலோ இருப்பவர்களுக்குத்தான் இது பொருந்தும். ஆனால் இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருக்க அவர்கள் உரிய விசா பெற வேண்டும்.

    இலங்கை தமிழர்கள்

    2015-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி அல்லது அதற்கு முன்பு இந்தியாவில் தஞ்சம் அடைந்த, பதிவு செய்யப்பட்ட இலங்கை தமிழர்களுக்கும் பொது பாஸ்போர்ட், விசா தேவைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 1959-ம் ஆண்டுக்கும், 2003-ம் ஆண்டுக்கும் இடையே காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் வழங்கிய "பெர்மிட்" மூலம் இந்தியாவில் நுழைந்த திபெத்தியர்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது. அவர்கள் உரிய அதிகாரிகளிடம் பதிவு செய்துகொண்டு, பதிவு சான்றிதழ் பெற வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    English Summary

    The Central Government has relaxed passport and visa regulations for certain foreign nationals residing in India, including specific groups of Pakistanis, minority refugees, Sri Lankan Tamils, and Tibetans. The rules have also been relaxed for individuals of Indian origin who acquired citizenship of Malaysia or Singapore and arrived in India before December 31, 2009.