இந்தியா எச்சரித்தது.. நாங்கதான் கேட்கல! சீனா குறித்து உடைத்து பேசிய பெல்ஜியம்!

  • டெல்லி: பெல்ஜியம் நாட்டின் பிரதமர் பார்டி டி வீவர், இந்தியாவில் நடைபெற்ற சிஐஐ மாநாட்டில் பங்கேற்றிருந்தார். அப்போது அவர் பேசுகையில், சீனாவின் ஆதிக்கம் குறித்து முன்னரே இந்தியா எங்களுக்கு எச்சரித்திருந்தது, நாங்கள்தான் அதை கேட்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    மேலும் அவர் பேசியதாவது, "ஐரோப்பிய சந்தைகளில் சீன பொருட்களின் ஆதிக்கம் மற்றும் அதன் மீதான ஐரோப்பாவின் பொருளாதார சார்பு நிலை குறித்து ஏற்கெனவே இந்தியா நமக்கு எச்சரித்திருந்தது. ஆனால், ஐரோப்பிய நாடுகள் அப்போது அதை சரியாக கேட்டு நடக்கவில்லை.

    Advertisement

    கடந்த பல ஆண்டுகளாக உற்பத்தி செலவை விட குறைவான விலையில் சீன பொருட்கள் ஐரோப்பிய சந்தைகளில் கொட்டப்பட்டது. இதை ஐரோப்பா வெறுமென வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது. இதனால் ஐரோப்பாவின் சொந்த தொழில்துறை அடித்தளம் பலவீனமடைந்துள்ளது. மட்டுமல்லாது.. ஒரு குறிப்பிட்ட நாட்டின் மீதான சார்பு நிலையும் அதிகரித்தது. தற்போதுதான் ஐரோப்பா திடீரென விழித்துக்கொண்டிருக்கிறது.

    ஐரோப்பாவிற்கு எதிராக பொருளாதார செல்வாக்கை பயன்படுத்திய அந்த நாடு(சீனா) உங்களுக்கு மிக அருகில் உள்ள அண்டை நாடுதான். எங்கள் மீதான பொருளாதார சார்பை யாரும் எங்களுக்கு எதிரான ஒரு மிரட்டல் ஆயுதமாக பயன்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை" என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வீவர் செப்.2-4 வரை இந்தியாவில் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியிருந்தார். பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, செமிகண்டக்டர் மற்றும் உயர் தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு முக்கிய உடன்படிக்கைகள் கையெழுத்தாகின.

    சீனா விஷயத்தில் இந்தியா எப்போதும் உஷாராகவே இருந்து வந்திருக்கிறது. காரணம், சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பெரும்பாலும், விலை மலிவானதாகவே இருக்கிறது. அதே நேரம் தரமு ஓரளவுக்கு சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கிறது. இதனால் மற்ற நாடுகளின் தயாரிப்பு பொருட்கள் பெரிய அளவுக்கு விற்பனை ஆவதில்லை. இந்தியாவை எடுத்துக்கொண்டால்.. சீனாவின் செல்போன் மாதிரி மற்ற நிறுவனங்களின் செல்போன்கள் பெரிய அளவுக்கு விற்பனை ஆவதில்லை.

    Advertisement

    செல்போன் சந்தையை தவிர, மற்ற எலக்ட்ரானிக் சந்தையை எடுத்துக்கொண்டாலும் இதே நிலைமைதான். அவ்வளவு ஏன் ஆட்டோ மொபைல் துறையிலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. சீனாவின் BYD கார்களை தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. இது குறித்து உலக நாடுகளுக்கு இந்தியா எச்சரித்திருந்தது. இதைத்தான் பெல்ஜியம் பிரதமர் பேசியிருக்கிறார்.

    English Summary

    India: Belgian Prime Minister Bart De Wever participated in the CII conference held in India. Speaking at the event, he acknowledged that India had previously warned them about China's dominance, but they had failed to heed that warning.