பாகிஸ்தான் உதவிக்கு சவுதி அரேபியா வராது.. இந்தியாவுக்கு குட்நியூஸ்! என்ன காரணம்?

  • டெல்லி: சவுதி அரேபியா - பாகிஸ்தான் இடையே 'மெக்கா ஒப்பந்தம்' உள்ளதால் இனி இந்தியா தாக்கும்போது
    பாகிஸ்தானுக்கு உதவியாக சவுதி அரேபியா வரலாம் என சொல்லப்பட்ட நிலையில் அது நடக்க வாய்ப்பே இல்லை
    என்று சொல்லப்படுகிறது. அது ஏன்? அதன் பின்னணி என்ன ? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    சவுதி அரேபியா - பாகிஸ்தான் - துருக்கி இடையே 'மெக்கா ஒப்பந்தம்' உள்ளது. இதன்மூலம் இந்த 3 நாடுகளில் யார் மீது தாக்குதல் நடத்தினாலும் அதனை தங்கள் மீதான தாக்குதலாக கருதி மீதமுள்ள 2 நாடுகள் சேர்ந்து குறிப்பிட்ட அந்த நாட்டை தாக்கும் என்பதாகும். இதனால்
    இனி நம் நாடு பாகிஸ்தானை தாக்கினால் சவுதி அரேபியா, துருக்கி உதவிக்கு வரலாம் என்று சொல்லப்பட்டது.

    Advertisement

    ஆனால் உண்மையில் சவுதி அரேபியா, பாகிஸ்தானின் உதவிக்கு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று
    தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதன் பின்னணி பற்றி பார்க்கலாம்.

    இதற்கு நாம் 44 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். ஏனென்றால் சவுதி அரேபியா - பாகிஸ்தான் இடையே
    ராணுவம் சார்ந்து ஒப்பந்தம் செய்வது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு கடந்த 1982ம் ஆண்டில் சவுதி அரேபியா - பாகிஸ்தான் இடையே ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Protocol on Military Cooperation) மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

    இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் என்பது சவுதி அரேபியாவின் பாதுகாப்பை உறுதி செய்வது தான். 1970
    காலக்கட்டத்தில் மத்திய கிழக்கில் உள்ள ஈரானில் உள்நாட்டு புரட்சி, ஆப்கானிஸ்தானில் சோவியத் படையெடுப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தன. இது சவுதி அரேபியாவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கின. இதனால் சவுதி அரேபியா தனது நாட்டை பாதுகாக்க பாகிஸ்தானுடன் போட்ட ஒப்பந்தம் தான் சவுதி அரேபியா - பாகிஸ்தான் ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்.

    Advertisement

    இந்த ஒப்பந்தப்படி பாகிஸ்தான் படை வீரர்கள் சவுதி அரேபியாவில் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டனர்.
    சவுதி அரேபியாவின் எல்லை மற்றும் உள்கட்டமைப்புகள், புனித ஸ்தலங்களை பாதுகாக்க 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். இவர்கள் அங்கேயே தங்கி பணியாற்றினர். பாதுகாப்பு மட்டுமின்றி சவுதி அரேபியாவின் முப்படைகளுக்கும் தொழில்முறை பயிற்சி, ஆலோசனைகளை வழங்கினர். இதனால் சவுதி அரேபியா பிரச்சனைகள் இன்றி தப்பியது.

    இதற்கு கைமாறாக பதற்றமான சூழலில் சவுதி அரேபியா தனது படைகளை ஒருபோதும் பாகிஸ்தானுக்கு அனுப்பி பாதுகாப்பு வழங்கியது இல்லை. மாறாக சவுதி அரேபியா சார்பில் பாகிஸ்தானுக்கு நிதியுதவி, மானிய விலையில்
    கச்சா எண்ணெய் உள்ளிட்டவை மட்டுமே வழங்கப்பட்டன. அதன்பிறகு சவுதி அரேபியா, பாகிஸ்தான் படைகளை தனது சொந்த லாபத்துக்காக பிற நாடுகளை எதிர்த்து சண்டையிட வைக்க முடிவெடுத்தது.

    Advertisement

    இதற்கு பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து பாகிஸ்தான் தனது படைகளை மெல்ல மெல்ல சவுதி அரேபியாவிடம் இருந்து திரும்ப பெற்று கொண்டது. அதுமட்டுமின்றி 8 ஆண்டுகளாக நடந்த ஈரான் - ஈராக் போரும் முடிவுக்கு வந்ததால் சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலும் தணிந்தது. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாடு திரும்பினர்.

    இருப்பினும் இந்த 1982ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் தான் தற்போது இந்த நாடுகள் இடையே 'மெக்கா' ஒப்பந்தம் மேற்கொள்ள வழிவகுத்தது. இந்த ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா - பாகிஸ்தான் - துருக்கி உள்ளிட்ட 3 நாடுகள் உள்ளன. இதில் எந்த நாடு மீது தாக்குதல் நடத்தினாலும் அது தங்களின் மீதான தாக்குதலாக கருதி பதிலடி கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    Advertisement

    ஆனால் தற்போது சவுதி அரேபியா, ஹவுதிகளிடம் அடிவாங்குகிறது. இருப்பினும் பாகிஸ்தான், துருக்கி பெரிய அளவில் ஹவுதிகளை தாக்க சவுதி அரேபியாவிற்கு உதவவில்லை. பாகிஸ்தான் மட்டும் சுமார் 8 ஆயிரம் வீரர்களை சவுதியில் நிலைநிறுத்தி உள்ள நிலையில் துருக்கி அதையும் செய்யவில்லை. இதனால் எதிர்காலத்தில் பாகிஸ்தானை நம் நாடு தாக்கினாலும் கூட சவுதி அரேபியா பெரிய அளவில் பாகிஸ்தானுக்கு உதவி செய்யாது என சொல்லப்படுகிறது.

    அதுமட்டுமின்றி சவுதி அரேபியாவில் முப்படைகள் இருந்தாலும் கூட அதன் படை வீரர்களின் செயல்திறன் பிற நாடுகளை ஒப்பிடும்போது குறைவாக தான் இருக்கும். ஏனென்றால் சவுதி அரேபியா யாரிடமும் சண்டையை விரும்புவது இல்லை. இதனால் சவுதி அரேபியா தேவையென்றால் பாகிஸ்தானுக்கு நிதி, ஆயுதங்களை வேண்டுமானால் முன்பு போல் பாகிஸ்தானுக்கு வழங்கலாம்.

    Advertisement

    ஆனால் அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. அது என்னவென்றால் நம் நாட்டுக்கும், சவுதி அரேபியாவிற்கும் இடையே நல்ல உறவு உள்ளது. இருநாடுகள் இடையே கச்சா எண்ணெய் உள்பட பல்வேறு வர்த்தகங்கள் நன்றாக உள்ளன. இப்படி இருக்கும்போது நமக்கு எதிராக பாகிஸ்தானுக்கு உதவி செய்தால் இந்தியா - சவுதி அரேபியா இடையேயான உறவை பாதிக்கும். அதுமட்டுமின்றி உண்மையிலயே நம் நாடு மோதலை விரும்புவது இல்லை. ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் மோதலை உருவாக்கும். எனவே பயங்கரவாதிகளின் கூடாரமாக இருக்கும் பாகிஸ்தானுக்காக ஒருபோதும் இந்தியாவை பகைக்க சவுதி விரும்பாது. இதனால் 'மெக்கா' ஒப்பந்தத்தால் சவுதி அரேபியாவால் நமக்கு பிரச்சனை வராது என்றே நிபுணர்கள் சொல்கின்றனர்.

    ஆனால் துருக்கியால் நமக்கு பிரச்சனை வரலாம். ஏனென்றால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போதே துருக்கி, பாகிஸ்தானுக்கு உதவி செய்தது. நம் நாட்டுக்கு எதிராக ட்ரோன் அனுப்பியது உள்ளிட்ட பணிகளை துருக்கி படை வீரர்கள் ரகசியமாக செய்ததாக கூறப்பட்டது. இனி 'மெக்கா ஒப்பந்தம்' அடிப்படையில் துருக்கி நேரடியாகவே நமக்கு எதிராக பாகிஸ்தானுக்கு உதவலாம் என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

    English Summary

    There has been speculation that Saudi Arabia might come to Pakistan's aid in the event of an attack by India, citing the 'Mecca Agreement' between the two nations; however, it is now being said that such a scenario is highly unlikely. Let us examine this matter here.