டெல்லி: ரூ.500 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். டிஜிட்டல் கரன்சி குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் தாளாக இருப்பது ரூ.500 தான். 2 ஆயிரம் நோட்டுகளை கடந்த 2023 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. செல்லாது என்று அறிவிக்கப்படாவிட்டாலும் அனைத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் திரும்ப பெறப்படுவதாக அறிவித்து திரும்பவும் பெற்றுக்கொண்டது.
அதன்படி தற்போது ரூ.500 தாள்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ள உயர் மதிப்பு கொண்ட ரூபாய் தாளாக உள்ளது. தற்போது புழக்கத்தில் இருக்கும் இந்த ரூ.500 ரூபாய் நோட்டுகளையும் திரும்ப பெற வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிப்பதன் மூலம் பணப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர முடியும் எனவும் ஊழலை முறியடிக்க முடியும் என்றும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இதன் மூலம் நாட்டின் வளத்தை பெருக்கவும் வறுமையை ஒழிப்பதும் எளிதாகும் என்றும் சந்திர பாபு நாயுடு கூறியுள்ளார். அதுமட்டுமின்றி டிஜிட்டல் கரன்சிக்கு ஆதரவாகவும் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார். இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறியதாவது:- "டிஜிட்டல் கரன்சி குறித்த அறிக்கைக்கான ஆலோசனைகளை கொடுத்ததே நான்தான். இது குறித்து பரிசீலிக்குமாறு நான் ஏற்கனவே பிரதமர் மோடியை வலியுறுத்தியிருக்கிறேன். தற்போது அதே கோரிக்கையை மீண்டும் வைக்கிறேன். தொடர்ந்து இந்த விவகாரத்தை நான் எழுப்புவேன். ரூ.500, ரூ.1,000, ரூ.2,000- தாள்களை ஒழிக்க வேண்டும். ரூ.100, ரூ.200 தாள்கள் மட்டுமே இருக்க வேண்டும்" என்றார். இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்று கூறி கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, புதிதாக ரூ.500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் அச்சிடப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கை பெரும் தோல்வியை சந்தித்ததாகவும் ஏழை எளிய மக்களே பாதிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு 10 ஆண்டுகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு இந்த கருத்தை முன்வைத்துள்ளார். தொழில்நுட்பத்தை சரியாக அமல்படுத்தினால் வளத்தை பெருக்குவது கடினம் இல்லை என்றும் வறுமையை ஒழிப்பது கஷ்டமான ஒன்றாக இருக்காது எனவும் கூறியுள்ளார். அதேபோல, தேர்தல் நடைமுறைகளிலும் அடிப்படையில் இருந்தே மாற்றம் வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். பொதுசேவை அடிப்படையில்தான் தேர்தல்கள் இருக்குமே தவிர பண பலத்தால் இருக்க கூடாது என்றார். தேர்தலில் பணம் விநியோகத்தை கட்டுப்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி முயற்சி மேற்கொண்டு வருகிறது. தேர்தல் செலவுகளை குறைப்பதன் மூலம், தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அதிகரிக்கும் எனவும் கூறினார்.500 ரூபாய் நோட்டை தடை செய்யனும்
டாலருக்கு எதிராக உயர்ந்த இந்திய ரூபாய்.. தங்கம் விலை அஸ்திரவாமே ஆடப்போகுது? உண்மை நிலவரம் என்ன?
ரூ.100, ரூ.200 தாள்கள் மட்டுமே இருக்க வேண்டும்
10 ஆண்டுகள் நிறைவு
உலக சந்தையை திரும்பி பார்க்க வைக்கும் இந்திய ரூபாய்.. 7 மாதங்களில் இல்லாத உச்சம்.. எல்லாமே மாறுதே!