செமிகண்டக்டர் முதல் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு வரை! பிரதமர் மோடி அறிவித்த 6 பிரம்மாண்ட திட்டங்கள்

  • டெல்லி: நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இளைஞர் நலன், தொழில்நுட்பம், கல்வி, விளையாட்டு, செமிகண்டக்டர் மற்றும் எரிசக்தி ஆகிய துறைகள் தொடர்பாக பிரதமர் மோடி அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    நாடு முழுவதும் 80வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுதந்திர உரையில் பிரதமர் மோடி 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். இளைஞர் நலன், தொழில்நுட்பம், கல்வி, விளையாட்டு, செமிகண்டக்டர், எரிசக்தி ஆகிய துறைகள் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசுகையில், அடுத்த ஓராண்டிற்குள் நாடு முழுவதும் இருந்து 1 கோடி இளைஞர்களுக்கு ஏஐ துறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதன் மூலமாக சர்வதேச அளவில் ஏஐ துறையில் இந்தியா முன்னிலையில் இருக்கும் என்று தெரிவித்தார். அதேபோல் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி என்பது ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்களுக்கு மிகப்பெரிய சுமையாக மாறியுள்ளது. அதனால் இலவச ஆன்லைன் பயிற்சியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு தங்களின் குழந்தைகளை பெற்றோர் அனுப்பவில்லை என்றால், அவர்கள் கவுரவமான குடும்பமாக பார்க்கப்படுவதில்லை.

    Advertisement

    இதன் காரணமாக இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலமாக பெற்றோருக்கு பல்லாயிரக்கணக்கான செலவு மிச்சமாகும். அதனை குழந்தைகளுக்காக செலவிட முடியும். நம்மிடம் டிஜிட்டல் கட்டமைப்பு இருக்கிறது. திறமை வாய்ந்த ஆசிரியர்கள் இருக்கின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும்.

    அதேபோல் 2036 ஒலிம்பிக் தொடரை நடத்த இந்தியா தீவிரமாக இருக்கிறது. அதேபோல் 2030 காமன்வெல்த் கேம்ஸை ந்டத்த உள்ளோம். மொத்தமாக 40 பிரிவுகளில் 350 போட்டிகள் நடக்க உள்ளது. அந்த போட்டிகளில் நாம் தகுதி கூட பெறுவதில்லை. அதனால் 4ல் 3 பங்கு போட்டிகளில் இந்தியா பங்குபெறும் வகையில் திறமையான வீரர்களை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.

    Advertisement

    நாடு முழுவதும் 5 வயது முதல் 15 வயது வரையிலான திறமையான மாணவர்களை கண்டறிந்து, அவர்களை தரமான விளையாட்டு வீரர்களாக உருவாக்குவதற்கான டேலண்ட் ஹண்ட் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதேபோல் அவசர கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அதிநவீன பயிற்சி பெற்ற தன்னார்வலர்களை கொண்ட சிவில் டிஃபென்ஸ் கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது.

    அதேபோல் செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. ஏற்கனவே நாட்டில் 3 செமிகண்டக்டர் ஆலையை நிறுவி, அதனை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய தொடங்கி இருக்கிறோம். அடுத்த 7 முதல் 8 ஆண்டுகளில் 5 முதல் 8 செமிகண்டக்டார் ஆலைகளை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் 2047ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி உற்பத்தியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.

    English Summary

    Semi Conductor to Free Online Coaching, PM Modi Unveils 6 Major Announcements on Independence Day 2026