செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது.. டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்

  • டெல்லி: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் புதிய வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்று கூறி முன்ஜாமீன் வழங்கி அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் 2021 முதல் 2026 மே மாதம் வரை திமுகவின் ஆட்சி நடந்தது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இந்த காலக்கட்டத்தில் டாஸ்மாக்கில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.

    Advertisement

    கடந்த 28 ம் தேதி செந்தில் பாலாஜி மற்றும் அவர் தொடர்புடைய சென்னை, கரூர், திருவாரூர், கரூர், தஞ்சாவூர், கோவை, நாமக்கல், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, காங்சிபுரம், விழுப்புரம், சிவகங்கை உள்பட 41 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    செந்தில் பாலாஜியின் கரூர் இல்லம், அவரது கூட்டாளிகளின் வீடு, அலுவலகங்கள், சென்னையில் செந்தில் பாலாஜி தங்கியிருக்கும் ஹோட்டல்கள், திமுக எம்பி டிஆர் பாலுவுக்கு சொந்தமானது என்று கூறப்படும் திருவாரூர் மதுபான ஆலைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி முறைகேடு தொடர்பாக செந்தி ல் பாலாஜி, டாஸ்மாக் இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விசாகன், டாஸ்மாக் அதிகாரிகள், செந்தில் பாலாஜியின் நண்பர்கள் என்று 7 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டம் உள்பட 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    Advertisement

    இதனால் செந்தில் பாலாஜி கைது செய்யப்படும் அச்சம் எழுந்தது. இதனால் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் செந்தில் பாலாஜி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த மேல்முறையீடு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தமிழக அரசு சார்பில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    Advertisement

    தமிழக அரசு சார்பில், ''டாஸ்மாக் முறைகேடு ஆயிரக்கணக்கான கோடிக்கு நடந்துள்ளதாக தெரிகிறது. கடந்த ஆட்சியில் இதுபற்றி விசாரணை நடத்த விடாமல் செந்தில் பாலாஜி தடுத்தார். தற்போதும் அவர் செல்வாக்கு மிக்க நபராக உள்ளார். இதனால் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது'' என்று வாதம் வைக்கப்பட்டது.

    ஆனால் அதனை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. செந்தி்ல் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியதோடு, அவரை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது. மேலும் செந்தில் பாலாஜி அனைத்து விசாரணைகளுக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். செந்தில் பாலாஜி தொடர்பான மனுவுக்கு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிலளிக்க வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை 3 வார காலத்துக்கு தள்ளிவைத்து அதிரடியாக உத்தரவிட்டது. இதனால் செந்தில் பாலாஜி நிம்மதியடைந்துள்ளார்.

    English Summary

    The DVAC has registered a new case against former DMK Minister Senthil Balaji regarding irregularities in TASMAC. Following the Madras High Court's dismissal of his anticipatory bail plea yesterday, Senthil Balaji has appealed to the Supreme Court. This matter is scheduled for a hearing today.