8 மாத கர்ப்பிணி நடிகை! கெஞ்சியும் கூட விடல.. கொடூரமாக குத்தி கொன்ற மர்ம கும்பல்! அதிர்ந்த ஹாலிவுட்

  • லாஸ் ஏஞ்சல்ஸ்: உலக புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர்கள் வாழும் பகுதிகளில் உச்சபட்ச பாதுகாப்பு இருக்கும்! அப்படிப்பட்ட பகுதியிலும் கூட 8 மாத கர்ப்பிணியாக இருந்த பிரபல நடிகை ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டார். வீடு புகுந்த மர்ம கும்பல் பிரபல ஹாலிவுட் நடிகை உட்பட 5 பேரை கொடூரமாக கொலை செய்ததிருந்தது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    ஹாலிவுட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொடூரமான கொலை சம்பவங்களில் ஒன்று 1969ம் ஆண்டு நடந்த ஷரோன் டேட் கொலை. ஆனால், இந்த கொலை ஷரோன் டேட்டை குறிவைத்து நடத்தப்பட்டது இல்லை. வேறு ஒருவரை தேடி சென்ற கொலையாளிகள் தவறுதலாக 8 மாத கர்ப்பிணியாக இருந்த நடிகை ஷரோன் டேட் உள்ளிட்ட ஐந்து பேரை கொன்றுள்ளனர்.

    Advertisement

    கொடூரம்

    இந்த கொடூரம் 1969ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி இரவு நடந்துள்ளது. 26 வயதான ஷரோன் டேட் தனது மூன்று நண்பர்களுடன் இரவு உணவை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார். எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த அவர், ஐரோப்பாவில் இருந்த தனது கணவரும் திரைப்பட இயக்குநருமான ரோமன் போலான்ஸ்கி என்பவருக்காக காத்திருந்தார். ஆனால், அதிகாலை விடியும் முன்பே டேட், அவரது நண்பர்கள் ஜே செப்ரிங், வோஜ்சிக் ஃப்ரைகோவ்ஸ்கி, அபிகெயில் ஃபோல்கர் மற்றும் அங்கு வந்திருந்த ஸ்டீவன் பேரன்ட் ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர்.

    யா் இவர்?

    1943 ஜனவரி 24ம் தேதி டல்லாஸில் பிறந்த ஷரோன் டேட். இவரது தந்தை அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால் அடிக்கடி நடந்த பணியிடமாற்றங்களால் பல நகரங்களில் வளர்ந்தார். சிறு வயதிலேயே அழகு போட்டியில் வென்ற அவர், இளமையில் மாடலிங் செய்தார். பின்னர் இத்தாலியில் குடும்பத்துடன் வசித்தபோது திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

    Advertisement

    முதலில் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றிய அவர், பிறகு படங்களிலும் நடித்தார். 1967ல் வெளியான வேலி ஆஃப் தி டால்ஸ் திரைப்படம் அவருக்கு பெரிய புகழை தேடித்தந்தது. இதற்காக கோல்டன் குளோப் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். தி பியர்லெஸ் வேம்பயர் கில்லர்ஸ் படப்பிடிப்பின்போது இயக்குநர் ரோமன் போலான்ஸ்கியை சந்தித்த டேட், அவரை காதலித்து 1968 ஜனவரியில் லண்டனில் திருமணம் செய்துகொண்டார். அதே ஆண்டின் இறுதியில் கர்ப்பமானார்.

    கொலைக்கு என்ன காரணம்

    திருமணத்திற்கு பிறகு டேட் மற்றும் போலான்ஸ்கி வசித்து வந்த வீடு, அதற்கு முன்பு தயாரிப்பாளர் டெர்ரி மெல்ச்சருக்கு சொந்தமானது. மெல்ச்சர் பல்வேறு இசை ஆல்பங்களை தயாரித்தவர். இருப்பினும், மெல்ச்சர் வீட்டை காலி செய்தது பலருக்கும் தெரியாது. டேட் தம்பதி குடியேறிய பிறகும் கூட பலரும் மெல்ச்சரை சந்திக்க அந்த வீட்டிற்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    Advertisement

    அவர்களில் ஒருவர்தான் கொலையாளி சார்லஸ் மேன்சன். இசைக்கலைஞராக புகழ்பெற வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர், பல பாடல்களை எழுதி பாடியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் டெர்ரி மெல்ச்சரை சந்தித்தார். மெல்ச்சர் தனது இசை வாழ்க்கைக்கு உதவுவார் என மேன்சன் எதிர்பார்த்தார். ஆனால் மெல்ச்சர் எந்தவொரு உதவியையும் செய்யவில்லை. இதனால் மெல்ச்சர் மீது மேன்சன் கடும் கோபத்தில் இருந்தார்.

    என்ன நடந்தது!

    இதற்கு நடுவே மேன்சன் தனக்கான ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டார். தன்னை ஒரு ஆன்மீக தலைவன் போல காட்டிக்கொண்டார். போதைப்பொருள் பயன்பாட்டை அவர் ஊக்குவித்தார். போதை பொருளை எடுத்துக் கொண்ட அவரது குழுவினர் மேன்சனை கடவுள் போல நம்பினார். அவர் சொன்னதை செய்து முடிக்க ரெடியாக இருந்தனர்.

    Advertisement

    தனது இசை பயணத்திற்கு உதவாத மெல்ச்சர் மீது கடும் கோபத்தில் இருந்த மேன்சன், தனது குழுவை வைத்து மெல்ச்சரை கொல்ல திட்டமிட்டார். சம்பவம் நடந்த ஆகஸ்ட் 8 இரவு, மேன்சன் தனது குழுவில் இருந்த சார்லஸ் "டெக்ஸ்" வாட்சன், சூசன் அட்கின்ஸ், பாட்ரிசியா கிரென்விங்கல் மற்றும் லிண்டா கசாபியன் ஆகியோரை மெல்ச்சர் வீட்டிற்கு அனுப்பினார். முதலில் தொலைப்பேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது. அங்கிருந்து கிளம்பவிருந்த ஸ்டீவன் பேரன்ட் என்பவர் முதலில் கொல்லப்பட்டார். காருக்குள் வைத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் கொலையாளிகள் வீட்டுக்குள் நுழைந்தனர். உள்ளே ஷரோன் டேட், ஜே செப்ரிங், ஃப்ரைகோவ்ஸ்கி மற்றும் ஃபோல்கர் இருந்தனர்.

    Advertisement

    கொடூரம்

    இதில் விஷயம் என்னவென்றால் மேன்சன் இவர்களை அங்கு அனுப்பியது மெல்ச்சரை கொல்ல தான். ஆனால், மெல்ச்சர் அந்த வீட்டை காலி செய்திருந்தது யாருக்கும் தெரியாது. இதனால் வீட்டில் இருந்த நபர்களில் ஒருவர் தான் மெல்ச்சர் என நினைத்து அனைவரையும் போதையில் இருந்த இந்த கும்பல் கொடூரமாக கொன்றது. கர்ப்பிணியான ஷரோன் டேட் தனது குழந்தைக்காகவாவது தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியதாக கூறப்படுகிறது. ஆனால் அவரும் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

    அடுத்த நாள், ஆகஸ்ட் 10ல் சூப்பர் மார்க்கெட் நிர்வாகி லெனோ லாபியான்கா மற்றும் அவரது மனைவி ரோஸ்மேரி ஆகியோர் லாஸ் ஃபெலிஸ் வீட்டில் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட இதை ஸ்டைலில் கொல்லப்பட்டனர். இந்த இரண்டு சம்பவங்களையும் இணைத்துப் பார்க்க போலீசாருக்கு உடனடியாக முடியவில்லை. இரு வழக்கிலும் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறினர்.

    சிக்கியது எப்படி?

    அப்போது சம்பந்தமே இல்லாத ஒரு சிறு புகாரில் கைதான மேன்சன் குழுவை சேர்ந்த சிலர், போலீசாரிடம் டேட் கொலை குறித்து தெரிவித்தனர். ஏதோ சொல்ல போய் பிறகு டேட் கொலை குறித்தும் சூப்பர் மார்கெட் நிர்வாகி கொலை குறித்தும் உளறிவிட்டனர். அதன் பிறகே விசாரணை தீவிரமடைந்தது. டேட் கொலையாளிகள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்த கொலைக்கு மேன்சன் தான் மூளையாக செயல்பட்டார் என்ற போதிலும் அவர் டேட்டை நேரடியாக கொல்லவில்லை. கொலை நடந்த வீட்டிற்கு கூட நேரடியாக செல்லவில்லை. இதனால் அவருக்கு தண்டனை கிடைக்குமா என கேள்வி எழுந்தது. இருப்பினும், போலீசாரும் அரசு தரப்பு வழக்கறிஞரும் மேன்சன் தான் கொலை செய்ய உத்தரவிட்டார் என்பதே நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்தனர்.

    இதையடுத்து 1971ல் மேன்சன் மற்றும் கொலையாளிகள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டன. இதனால் கடைசி வரை சிறையிலேயே வாழ்க்கையை கழித்த மேன்சன் 2017ல் சிறையிலேயே உயிரிழந்தார்.

    English Summary

    Hollywood actress Sharon Tate was brutally murdered in 1969 while eight months pregnant(பிரபல ஹாலிவுட் நடிகை கொடூர கொலை): Hollywood Murder latest news in tamil.