மொத்தமாக முடங்கிய டெல்லி.. விடாத பாஜக.. காங்கிரஸ்க்கு போட்டியாக பேரணி.. தகிக்கும் தலைநகர்

  • டெல்லி: டெல்லியில் இன்று ராகுல் காந்தி தலைமையில் 'இந்தியா' கூட்டணி கட்சியினர் பேரணி சென்று வரும் நிலையில் அதற்கு போட்டியாக பாஜகவினரும் பேரணி சென்றதால் மொத்த டெல்லியும் முடங்கியது. 1984ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி நடந்த சீக்கிய இனப்படுகொலைக்கு காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்க வேண்டும். ராகுல் காந்தி மன்னிப்ப கோர வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் இன்று பாஜகவினர் போட்டி பேரணி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி டெல்லியில் இன்று 'இந்தியா' கூட்டணி கட்சியினர் பேரணி நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இருந்து ராகுல் காந்தி தலைமையில் 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் திறந்த வாகனத்தில் ராம்லீலா மைதானம் நோக்கி சென்றனர்.

    ராகுல் காந்தி பயணித்த வாகனத்தில் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட பல அமைச்சர்கள் பங்கேற்றனர். அதோடு ராம்லீலா மைதானத்தில் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் பேச உள்ளனர். இதனால் ஏராளமான 'இந்தியா' கூட்டணி தலைவர்கள், தொண்டர்கள் ராம்லீலா மைதானத்தில் குவிந்துள்ளனர்.

    இந்நிலையில், ராகுல் காந்தி தலைமையிலான 'இந்தியா' கூட்டணி பேரணிக்கு போட்டியாக டெல்லியில் இன்று பாஜகவினரும் பேரணி சென்றனர். டெல்லியின் ஹரி நகரில் தொடங்கிய பாஜகவின் இந்த பேரணி திலகர் நகர் மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி சென்றது.

    Advertisement

    மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இந்த பேரணியை தொடங்கி வைத்தார். டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்பட பல பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என பல ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

    குறிப்பாக சீக்கியர்கள் ஏராளமாக பங்கேற்றனர். அனைவரும் ள் கருப்பு பட்டை அணிந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 1984ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி சீக்கியர் இனப்படுகொலை நடந்தது. இன்று நவம்பர் 1ம் தேதியாகும்.

    இதனால் சீக்கிய படுகொலை துயர நாளையொட்டி பாஜகவினர் இந்த பேரணி புறப்பட்டனர். இந்த பேரணியின்போது சீக்கிய இனப்படுகொலைக்கு காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    Advertisement

    ஒருபக்கம் காங்கிரஸ் கட்சியினரின் பேரணி, இன்னொரு பக்கம் பாஜகவினரின் பேரணி என்பதால் இன்று மொத்த டெல்லியும் முடங்கியது. பல முக்கிய மார்க்கெட் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

    இதனால் மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளதோடு, டெல்லி எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லிக்குள் வருவோர் எல்லையில் இறங்கி டெல்லிக்குள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    English Summary

    Delhi BJP Rally: Delhi came to a standstill today as the BJP held a counter-rally in response to a march organized by the ‘INDIA' alliance, led by Rahul Gandhi. The BJP's rally-which demanded that the Congress party take responsibility for the 1984 anti-Sikh pogrom (that began on November 1, 1984) and called for an apology from Rahul Gandhi-created a major stir in the national capital.