மோடிக்கு விழுது அடி மேல் அடி.. ஒருபுறம் இந்தியா.. மறுபுறம் கரப்பான் பூச்சிகள்! பின்னணி என்ன

  • டெல்லி: SIR, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அடுத்தடுத்து போராட்டக் களத்தில் இறங்குவதால், அக்டோபர் மாதம் மத்திய அரசுக்கு முக்கியமான அரசியல் சவாலாக மாறியுள்ளது. ஒரு பக்கம் இந்தியா கூட்டணி கட்சிகள் நாளை முதல் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில், கரப்பான் பூச்சி கட்சியும் நாளை போராட்டக் களத்தில் இறங்கவுள்ளது.

    Advertisement

    கடந்த 2 வாரங்களாகவே தேர்தல் ஆணையம் விவகாரம் தான் தேசியளவில் பேசுபொருளாகியுள்ளது. பல்வேறு விவகாரங்களில் தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக முடிவெடுத்தார்.. மற்ற தேர்தல் ஆணையர்களின் ஆலோசனைகளை கேட்கவில்லை என்பதே பிரதான குற்றச்சாட்டு. இதை தேர்தல் ஆணையம் மறுத்தாலும் எதிர்க்கட்சிகள் இதை பெரியதாக எடுத்து செல்கிறது.

    Advertisement

    இந்தியா கூட்டணி

    இதற்கிடையே செப்டம்பர் 30ம் தேதி டெல்லியில் நடைபெற்ற கூட்டத்துக்கு பிறகு இந்தியா கூட்டணி தேர்தல் ஆணைய விவகாரத்தில் போராட்டத்தை அறிவித்தது. அக்டோபர் 2 முதல் நாடு முழுவதும் "ஜனநாயகத்தை காப்போம்" என்ற பெயரில் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. மேலும், அக்டோபர் 6ம் தேதி எதிர்க்கட்சி எம்பிக்கள் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணி செல்ல உள்ளனர். மேலும், ஜனாதிபதியை சந்தித்து மனு அளிப்பது, எஸ்ஐஆர் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கோருவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளது.

    Advertisement

    கரப்பான் ஜனதா

    நாளைய தினம் மும்பை சிவாஜி பூங்காவில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் போராட்டத்தை அறிவித்துள்ளது. நாளைய தினம் மும்பையில் இந்த மெகா போராட்டம் தொடங்கும் என அதன் தலைவர் அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார். ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், SIR தொடர்பான நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

    தொடர்ந்து கோவா, பெங்களூர், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டங்களை நடத்தப் போவதாக கரப்பான் பூச்சி ஜனதா அறிவித்துள்ளது. மேலும், ஞானேஷ் குமார் குமார் பதவி விலகும் வரை போராட்டத்தை தொடரப்போவதாகவும் அக்கட்சி கூறியுள்ளது. அக்டோபர் 2ம் தேதி மும்பையில் நடைபெறும் போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையிலும், போராட்டத்தை நடத்த போவதாக கரப்பான் பூச்சி ஜனதா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

    Advertisement

    இரண்டு பக்கமும் அழுத்தம்

    ஒருபுறம் இந்தியா கூட்டணி நாடு முழுவதும் மாவட்ட அளவில் போராட்டங்களை முன்னெடுக்கிறது. மறுபுறம் கரப்பான் பூச்சி கட்சியும் தனியாக தேர்தல் ஆணையத்தை குறிவைத்து போராட்டங்களை அறிவித்துள்ளது. இதனால் எஸ்ஐஆர் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு தொடர்பான விவகாரம் தேசிய அளவில் விவாதமாகிறது. இந்த போராட்டங்கள் நேரடியாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

    பின்னணி

    தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், எஸ்ஐஆர் பணியில் வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், படிவம் 6 மாற்றங்கள் போன்ற முடிவுகளுக்கு கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனைகளைத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இரண்டு ஆணையர்கள் தொடர்ந்து ஆட்சேபனை தெரிவித்தும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவெடுத்தார் என்பதே பிரதான குற்றச்சாட்டாகும்.

    English Summary

    Opposition parties are stepping up protests over SIR and the functioning of the Election Commission(தேர்தல் ஆணைய போராட்டம்): SIR protest latest news in tamil.