SIR பஞ்சாயத்து! ஞானேஷ்குமார் மட்டும் கிடையாது.. மொத்தமாக சிக்கும் தேர்தல் ஆணையர்கள்!

  • டெல்லி: நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட SIR பணிகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், இது குறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு பலமுறை அதிருப்தி தெரிவித்தும், அவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை என்றும் மற்ற 2 தேர்தல் ஆணையர்களும் கூறியிருந்தனர். ஆனால், இந்த விஷயத்தில் ஞானேஷ் குமார் மட்டுமல்ல.. மற்ற 2 ஆணையர்கள் மீதும் தவறு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    ஞானேஷ் குமார் எங்க பேச்சை கேட்கவில்லை என்று, மற்ற 2 ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர். ஆனால், இப்படி குற்றம் சாட்டியதால் நடந்த தவறிலிருந்து 2 பேரும் தப்பித்துவிட முடியாது என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    என்ன பிரச்சனை?

    தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் புலனாய்வு அறிக்கையின்படி, கடந்த 10 மாதங்களில் சாந்து மற்றும் ஜோஷி ஆகிய இரு ஆணையர்களும், SIR, புதிய வாக்காளர் சேர்க்கைக்கான படிவம் 6 மாற்றம் மற்றும் ECINet சாப்ட்வேர் மூலம் தேர்தல் டேட்டாக்கள் ஒருங்கிணைக்கப்படுவதற்கு எதிராக சுமார் 14 முறை தங்களது அதிகாரப்பூர்வ எதிர்ப்புகளை பதிவு செய்திருக்கின்றனர் என்பது தெரிய வந்தது.

    ஆணையர்கள் எதிர்ப்பு

    குறிப்பாக கடந்த மே மாதம் படிவம் 6ல் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் சட்டவிரோதமானவை என விவேக் ஜோஷியும், சுக்பீர் சிங்கும் ஃபைல்களில் எழுதியிருந்தும், அவை தேர்தல் ஆணைய இணையதளத்தில் அமல்படுத்தப்பட்டன. ஆக.13 அன்று சுக்பீர் சிங் இதனை அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமான செயல் என்று குறிப்பிட்டு அதை நீக்க கோரினார்.

    Advertisement

    இந்த விஷயத்தில் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக முடிவெடுத்தார் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தாலும், மற்ற இரு ஆணையர்களின் செயல்பாடுகள் குறித்து பல கேள்விகள் எழுகிறது.

    3 கேள்விகள்

    அதாவது, தங்களின் எதிர்ப்புகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதாக கூறும் இந்த இரு ஆணையர்களும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எதிர்க்கட்சிகள், முன்வைத்த வாக்கு திருட்டு குற்றச்சாட்டின்போதும், அதற்கு பிறகு கடந்த மார்ச் மாதம் தேர்தல் அட்டவணை அறிவிப்புகள் வெளியான போதும், தலைமை தேர்தல் ஆணையருடன் இணைந்து கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்புகளில் பங்கேற்று தேர்தல் ஆணையத்தை ஆதரித்து பேசியது ஏன்? என்று கேள்வி எழுகிறது. விஷயம் கையை மீறி போய்விட்டது என்று தெரிந்தவுடன், அதை பொதுவெளியில் போட்டு உடைக்க வேண்டியதுதானே!

    Advertisement

    யார் பாஸ்?

    இரண்டாவது கே்ளவி, அமைச்சரவை செயலாளரை அணுகியது ஏன்? தேர்தல் ஆணையம் என்பது அரசியலமைப்புச் சட்டம் 324ன் படி தன்னாட்சி பெற்ற சுதந்திரமான அமைப்பு. அப்படியிருக்க தங்களின் ஐடி பிரிவு அதிகாரம் குறைக்கப்பட்டபோது, தங்களை நியமித்த இந்திய குடியரசுத் தலைவரிடம் முறையிடாமல், அரசு நிர்வாகத்தின் கீழிருக்கும் அமைச்சரவை செயலாளருக்கு இவர்கள் கடிதம் எழுதியது ஏன்? தேர்தல் ஆணையத்திற்கு.. அமைச்சரவை செயலாளர்தான் பாஸா?

    ராஜினாமா செய்ய வேண்டியதுதானே!

    மூன்றாவது முக்கியமான கேள்வி. அதாவது இவ்வளவு குற்றச்சாட்டுகளை வைத்த 2 ஆணையர்களும், ஏன் தங்களது பதவியை ராஜினாமா செய்யவில்லை? தேர்தல் ஆணையத்தில் பெரும்பான்மை முடிவுகளுக்கே சட்டப்பூர்வ அங்கீகாரம் உண்டு. 3 பேர் கொண்ட குழுவில் இவர்கள் இருவரும் நினைத்திருந்தால் ஒரு முழு கூட்டத்தை கூட்டி, அந்த முடிவுகளை தடுத்திருக்க முடியும். அவ்வாறு செய்ய முடியாமல், தங்களின் அதிகாரங்கள் முழுமையாக பறிக்கப்பட்டதாக கருதினால், அவர்கள் ஏன் தங்களது பதவியை ராஜினாமா செய்யவில்லை? என்கிற கேள்வி எழுகிறது.

    Advertisement

    கொந்தளித்த எதிர்க்கட்சிகள்

    இப்போது இந்த பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்திருப்பதால், ஞனேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. அவரை கைது செய்யக்கோரி டெல்லி, கொல்கத்தாவில் காங்கிரஸ் தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதேபோல, ஞனேஷ் குமார் பிறப்பித்த 14 ஒற்றை வாக்காளர் பட்டியல் (SIR) உத்தரவுக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றனர்.

    இது போதாது என.. காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 24 மணி நேரத்திற்குள் பதவி விலக வேண்டும்.. இல்லை எனில் அக்.2ம் தேதி முதல் மிகப்பெரிய போராட்டங்கள் வெடிக்கும் என்று எச்சரித்துள்ளன.

    Topics: #eci #india

    English Summary

    SIR row: The other two Election Commissioners had stated that there were numerous irregularities in the nationwide SIR (Special Summary Revision) operations and that, despite repeatedly expressing their dissatisfaction to the Chief Election Commissioner regarding this, he had paid no heed. However, it is said that the fault in this matter lies not only with Gyanesh Kumar but also with the other two commissioners.