உச்சநீதிமன்றத்திற்கு போன ஞானேஷ் குமார் பஞ்சாயத்து.. உடனடியாக நடவடிக்கை எடுக்கணும் என மனுத்தாக்கல்!

  • டெல்லி: SIR விஷயத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பெரிய தவறை செய்திருப்பதாகவும், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

    Advertisement

    ஏற்கெனவே மற்ற 2 தேர்தல் ஆணையர்களின் அதிருப்தி வெளிச்சத்திற்கு வந்த நிலையில், ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். இப்படி இருக்கையில் இது குறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி என்பவரால் இந்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் ஒப்புதல் அல்லது கலந்தாலோசனை இல்லாமல், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக பல முக்கிய முடிவுகளை எடுத்ததாக ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

    தற்போது நடைபெற்று வரும் SIR பணியின்போது சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு மூலம் விசாரணை நடத்த மனுதாரர் கோரியுள்ளார். மற்ற ஆணையர்களின் அனுமதியின்றி தேர்தல் விதிமுறைகள் மற்றும் மென்பொருளில் செய்யப்பட்ட மாற்றங்களை செல்லாததாக்க வேண்டும் என்றும், புதிய வாக்காளர்களுக்கான அசல் படிவம் 6 முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் இந்த பொதுநல மனுவில் கோரப்பட்டிருக்கிறது.

    Advertisement

    அதேபோல கடமை தவறிய குற்றத்திற்காக ஞானேஷ் குமார் மட்டுமின்றி மூத்த துணை தேர்தல் ஆணையர் மனிஷ் கார்க் மற்றும் ஐடி இயக்குநனர் சீமா கண்ணா ஆகியோர் மீதும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மனுவில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம், கடந்த ஓராண்டில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் ஒருமனதாகவே எடுக்கப்பட்டன என்றும், ஒரு அமைப்பில் மாறுபட்ட கருத்துக்கள் எழுவது இயல்பான ஒன்றுதான் என்றும் விளக்கம் அளித்துள்ளது. இதற்கிடையே காங். உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து தலைமை தேர்தல் ஆணையரின் ராஜினாமாவை வலியுறுத்தி வருகின்றன.

    Advertisement

    மறுபுறம் காக்ரோச் ஜனதா கட்சி, ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய 24 மணி நேரம் கெடுவை கொடுத்திருக்கிறது. அப்படி ராஜினாமா செய்யவில்லை எனில், அக்.2ம் தேதி முதல் நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெறும், ஜந்தர் மந்தர் 2.O வை பார்ப்பீர்கள் என்று மத்திய அரசை எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Supreme Court: A petition has been filed in the Supreme Court alleging that Chief Election Commissioner Gyanesh Kumar committed a major error regarding the SIR issue and demanding immediate action against him.