தேர்தல் ஆணையம் கிடையாதாம்.. SIR பணி மேற்கொள்ளும் முடிவை எடுத்தது யார் தெரியுமா? RTIக்கு வந்த பதில்

  • டெல்லி: 'SIR' எனும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணிகளை மேற்கொள்ளும் முடிவை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டதாக சமூக செயற்பாட்டாளரும், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலருமான அஞ்சலி பரத்வாஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் கூறியதாவது: ''வாக்காளர் பட்டியல் என்பது ஜனநாயக ரீதியாக தேர்தல் நடத்துவதற்கான ஆன்மா. ஆனால் இங்கு தேர்தல் தனக்கு ஏற்றபடி மாற்றப்படுகிறது. வாக்காளர் பட்டியல் தனக்கு ஏற்றப்படி மாற்றப்படுகிறது. இங்கு தேர்தல் நடத்துவதற்கான முன்பாகவே வெற்றி நிர்ணயம் செய்யப்படுகிறது.

    Advertisement

    முதலில் ஒரு கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். நம் நாட்டில் வாக்காளர் பட்டியலை யார் தயார் செய்வார்கள்? வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக 13 கோடி பேரின் பெயர்கள் நீக்கியது யார்? இந்த பணிகளை மேற்கொள்ளும் அதிகாரம் என்பது அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தான் உள்ளது.

    உண்மையில் நான் ஆர்டிஐ-யில்(தகவல் அறியும் உரிமை சட்டம்) ஒரு கேள்வி கேட்டேன். 'SIR' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி தொடங்கும்போது அந்த கேள்வியை எழுப்பி இருந்தேன். 'SIR' பணியை மேற்கொள்ளும் முடிவை யாரால் எப்படி எடுக்கப்பட்டது? என இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்டு இருந்தேன்.

    Advertisement

    அப்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் எனக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் 'SIR' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி இந்திய தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்படவில்லை என்று கூறினார். இது எவ்வளவு சீரியஸான விஷயம்.

    இப்போதும் சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் சொல்கிறது என்றால் இந்த முடிவை யார் எடுத்தது?. மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்ததா? பிரதமர் அலுவலகம் எடுத்ததா?. அப்படியென்றால் 13 கோடி வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது யார்?'' என்று கொந்தளித்துள்ளார்.

    Advertisement

    அஞ்சலி பரத்வாஜின் இந்த தகவல் தற்போது சர்ச்சையை அதிகரித்துள்ளது. 'SIR' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த மேற்கொள்ளும் பணிக்கான முடிவை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்காவிட்டால் அதன் பின்னணியில் இருப்பது யார்? என்ற கேள்விகளை பலரும் எழுப்பி வருகின்றனர்.

    English Summary

    Social activist and RTI advocate Anjali Bhardwaj has raised questions after a response to an RTI query revealed that the Election Commission of India had not taken a decision to undertake an intensive special revision of the electoral rolls.