ப்ளைதுபாய் விமானத்தை காப்பாற்றிய கொசு.. பைலட் ஸ்மித் மச்சார் பெயரின் சுவாரஸிய பின்னணி

  • டெல்லி: ஃப்ளைதுபாய் விமானத்தை கடத்தி விபத்திற்குள்ளாக்கும் முயற்சியை முறியடித்தவர்களில் முக்கியமானவர் பைலட் ஸ்மித் மச்சார். உலக நாடுகளை அவரை பாராட்டி வரும் நிலையில், அவரது பெயரில் இருக்கும் மச்சார் கவனம் பெற்றுள்ளது. இந்த மச்சார் என்றால் என்ன அர்த்தம் இதன் பின்னணி மற்றும் காரணம் தொடர்பாக நாம் பார்க்கலாம்.

    Advertisement

    ஃப்ளைதுபாய் விமானத்தில் ஏற்பட்ட நடுவானில் ஏற்பட்ட நெருக்கடியின்போது கேப்டன் ஸ்மித் மச்சார் காட்டிய துணிச்சல் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இதற்கிடையே அவரது சர் நேம் அவரது குடும்பப் பெயரான 'மச்சார்' குறித்தும் சமூக வலைத்தளங்களில் பலரும் ஆர்வத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனென்றால் "மச்சார்" என்றால் இந்தி மற்றும் குஜராத்தியில் கொசு என அர்த்தம்.

    Advertisement

    மச்சார்

    ஆனால், குஜராத்தில் 'மச்சார்' என்பது புதிதான அல்லது அரிதான குடும்ப பெயர் அல்ல. அந்த பெயருக்கு பல்வேறு வரலாற்றுப் பின்னணிகள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, குஜராத்தின் நாகர் சமூகத்தில் விலங்குகள், பறவைகள் மற்றும் பூச்சிகளின் பெயர்களை அடிப்படையாக கொண்ட பல குடும்ப பெயர்கள் இருக்கும்.

    இதற்கிடையே ஸ்மித் மச்சாரின் குடும்ப பெயர் குறித்து பத்திரிகையாளர் ஷீலா பட் விளக்கம் அளித்துள்ளார். குஜராத்தில் நாகர் சமூகத்தினரிடம் ஹாதி (யானை), மங்கட் (மூட்டைப்பூச்சி) உள்ளிட்ட பெயர்கள் சர் நேம்களாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, 'மச்சார்' என்ற பெயர் இருப்பது அங்கு முற்றிலும் புதிதான விஷயம் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    'மச்சார்' பெயர் எப்படி உருவானது?

    "மச்சார்" என்ற பெயர் உருவானதற்கு மூன்று முக்கிய கதைகளை சொல்கிறார்கள். முதலில் இது குஜராத்தி மொழியில் 'பொறாமை' அல்லது 'பகைமை' என்ற பொருளைக் கொண்ட 'மத்சர்' என்ற சொல்லில் இருந்து காலப்போக்கில் மாறியிருக்கலாம். தலைமுறைகள் கடந்து உச்சரிப்பு மாறியதால் 'மத்சர்' என்பது 'மச்சார்' என மாறியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    அடுத்து அந்த குடும்பத்தின் பூர்வீக இடத்துடன் தொடர்புடையது. கொசுக்கள் அதிகமாக காணப்பட்ட தாழ்வான அல்லது சதுப்பு நிலப்பகுதியில் அந்தக் குடும்பத்தின் முன்னோர்கள் வசித்திருக்கலாம். அதன் அடிப்படையில் அவர்களை அடையாளப்படுத்த பயன்படுத்தப்பட்ட பெயர் பின்னர் குடும்பப் பெயராக நிலைத்திருக்கலாம்.

    Advertisement

    மூன்றாவது கதை சற்று சுவாரஸ்யமானது. பாரம்பரிய குஜராத்தி சமூகங்களில் காமெடியாக குடும்ப பெயர்களை வைத்து கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது. உடல் அமைப்பில் சிறியவர், மெலிந்தவரை குறிப்பிட மச்சார் போன்ற பெயர்களை பயன்படுத்தி இருப்பார்கள். அதுவே பிறகு குடும்பப் பெயராக மாறியிருக்கலாம்.

    விலங்குகள்

    'மச்சார்' என்ற குடும்ப பெயர் தனித்துவமானதாகத் தோன்றினாலும், குஜராத்தில் விலங்குகள், பறவைகள் மற்றும் பூச்சிகளின் பெயர்களை குடும்ப பெயர்களாக பயன்படுத்தும் பாரம்பரியம் இருப்பதாக சமூக ஆய்வுகள் கூறுகின்றன. ஹாதி என்றால் யானை, கோடா என்றால் குதிரை, போபட் என்றால் கிளி என பல குடும்ப பெயர்கள் காணப்படுகின்றன. அவ்வளவு ஏன் வின்ச்சி (தேள்), ஷியால் (நரி) போன்ற பெயர்களும் கூட உள்ளன.

    Advertisement

    இந்த பெயர்கள் நாகர் பிராமணர்கள், பிரம்மக்ஷத்திரியர்கள், லோஹானாக்கள் உள்ளிட்ட பல சமூகங்களிலும் காணப்படுகின்றன. ஒரே குடும்ப பெயருக்கு வெவ்வேறு சமூகப் பிரிவுகளிலும் தனித்தனி வரலாற்று பின்னணியை கொண்டிருக்கலாம்.

    இரு பின்னணி

    உதாரணமாக மச்சார் குடும்ப பெயரை கொண்ட லோஹானா சமூகத்தினர் வரலாற்றில் கச்ச் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர்களாகவும், பெரும்பாலும் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், நாகர் பிராமணர்களில் இந்த பெயரை கொண்ட குடும்பங்கள் இலக்கியம் மற்றும் கல்வியில் சிறந்தவர்களாக இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

    English Summary

    Flydubai captain Smit Machchhar has gained international attention for his courage during the mid-air crisis(நடுவானில் விமானத்தில் நடந்த சம்பவம்): Flydubai Pilot name history will amaze many.