18 நாட்களில் ஒரு பருக்கை உணவு இல்லை.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சோனம் வாங்சுக்?

  • டெல்லி: நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் காலவரையற்ற உண்ணாவிரதம் 17வது நாளை எட்டியுள்ளது. அவரது உடல்நிலை மிக மோசமான நிலைக்கு சென்றுள்ள நிலையில், அவர் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Advertisement

    கடந்த சில ஆண்டுகளாகவே நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் பல குளறுபடிகள் நடக்கிறது. தேர்வுத்தாள் முன்கூட்டியே வெளியாவது, திருத்தும் முறைகளில் சிக்கல் என இது அடிக்கடி சர்ச்சையாகிறது. இந்தச் சூழலில் தான் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கல்வி துறையில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கினர்.

    Advertisement

    உண்ணாவிரதம்

    நாடு முழுக்க பல நகரங்களில் போராட்டத்தை நடத்திய கரப்பான் பூச்சி கட்சியினர் கடந்த மாதம் டெல்லி ஜனந்தர் மந்தரில் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர். நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே இவர்கள் கோரிக்கையாகும். இதில் கடந்த ஜூன் 28ம் தேதி முதல் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் பங்கேற்று, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

    17 நாட்களாக அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்கிறார். இதனால் அவரது உடல்நிலை மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. இந்த 2.5 வாரங்களில் மட்டும் வாங்சுக் சுமார் 8.2 கிலோ எடை இழந்துள்ளார். அவரது ரத்த அழுத்தம் 107/70 mmHg ஆகவும், ரத்த சர்க்கரை அளவு 67 mg/dL ஆகவும் பதிவாகியுள்ளது. மேலும், தசை இழப்பு, உடல் வலியும் ஆரம்பித்துவிட்டதாகக் கரப்பான் பூச்சி கட்சியினர் கூறியுள்ளனர்.

    Advertisement

    சோனம் வாங்சு

    இதற்கிடையே நாடு முழுக்க பல்வேறு தலைவர்களும் சோனம் வாங்சு தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் வாங்சுக் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக உத்தவ் தாக்கரே நேரடியாக சோனம் வாங்சுவிடம் பேசி உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். உண்ணாவிரதப் போராட்டத்தையும் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.

    கோரிக்கை

    அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி எழுத்தாளர்கள், சினிமா நடிகர்கள் என பலரும் சோனம் வாங்சு உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். எழுத்தாளர் அருந்ததி ராய், நடிகர்கள் நசீருதீன் ஷா, ரத்னா பதக் ஷா, பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டு வாங்சுக் உண்ணாவிரதத்தை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில் அவர்கள், "இது இத்தோடு முடியும் போராட்டம் இல்லை.. நீண்ட கால போராட்டம் என்பதால் எதிர்காலத்திலும் உங்கள் தலைமையும் வலிமையும் தேவை. எனவே உடல்நலனை பாதுகாப்பது அவசியம்" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    மறுப்பு

    பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தாலும் கூட சோனம் வாங்சு உண்ணாவிரத போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை. இது தொடர்பாக கேட்டால் அவர், "என்னிடம் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லாதீர்கள். அரசிடம் போய் கேளுங்கள். பேச்சுவார்த்தை நடத்த கூட அவர்கள் மறுக்கிறார்கள்" என்று சோனம் வாங்சுக் பதிலளித்ததாக அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.

    இப்போது அரசியலை தாண்டி சோனம் வாங்சுக்கின் உடல்நிலையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. ஜூலை 20ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தவும் கரப்பான் பூச்சி கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இருப்பினும், அதற்குள் சோனம் வாங்சு உடல்நிலை மேலும் மோசமடைய கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

    English Summary

    Activist Sonam Wangchuk health has deteriorated after more than two weeks of hunger strike at Delhi(மிக மோசமான நிலையில் சோனம் வாங்சுக் உடல்நிலை): Sonam Wangchuk Health latest news in tamil.