எழுந்து உட்கார கூட முடியல.. 20வது நாளாக தொடரும் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதம்.. பரபரக்கும் டெல்லி

  • டெல்லி: நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் 20வது நாளாக தொடர்கிறது. அவரது உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.

    Advertisement

    கடந்த சில ஆண்டுகளாகவே நீட் தொடங்கி பல்வேறு போட்டி தேர்வுகளில் தொடர்ந்து குளறுபடிகள் நடந்து வருகிறது. இதனால் பல லட்சம் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதற்கிடையே நீட் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான் பூச்சி கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    Advertisement

    சோம் வாங்சுக்

    டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் கரப்பான் பூச்சி கட்சியுடன் தேர்ந்து சோனம் வாங்சுவும் இணைந்துள்ளார். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை வலியுறுத்தி வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இந்த போராட்டம் இப்போது 20வது நாளை எட்டியுள்ளது.

    இதற்கிடையில், சோனம் வாங்சுக்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களாக உணவு எடுத்துக் கொள்ளாததால் அவரது உடல் எடை கணிசமாக குறைந்துள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், தன்னுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று வாங்சுக் உறுதியாக தெரிவித்துள்ளார்.

    Advertisement

    ஆதரவு

    இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி, சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நேற்று திமுகவும் தனது ஆதரவை வெளிப்படுத்தியது. திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா, ஜந்தர் மந்தரில் சோனம் வாங்சுக்கை நேரில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும், நீட் முறைகேடுகள் தொடர்பாக மாணவர்களின் குரலுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    திமுக

    இதனிடையே போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் சூழலில், அப்போது நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளனர். அதில் அதிகளவில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Advertisement

    வலியுறுத்தல்

    சோனம் வாங்சுக்கின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரை உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பல்வேறு அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இருப்பினும், மத்திய அரசு தரப்பில் இதுவரை எந்தவிதமான நேரடி பேச்சுவார்த்தை முயற்சியும் இல்லை என்பதையே பதிலுக்கு வாங்சுக் சுட்டிக்காட்டுவதாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்திற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தேவையான நேரத்தில் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.

    English Summary

    Social activist Sonam Wangchuk indefinite hunger strike demanding the resignation of Dharmendra Pradhan(தொடர்ந்து சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதம்): Sonam Wangchuk Hunger Strike latest news in tamil.