உண்ணாவிரத போராட்டத்தை முடிக்க ரெடி! 3 முக்கிய கண்டிஷன்களை அறிவித்த சோனம் வாங்சுக்!

  • டெல்லி: நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தில் தர்மேன்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 20+ நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், தனது மூன்று முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றினால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிப்பதாக அறிவித்துள்ளார். டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து அவர் வெளியிட்ட கடிதம் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

    Advertisement

    டெல்லியில் இப்போது மிகவும் பரபரப்பான ஒரு சூழலே இருக்கிறது. ஒரு பக்கம் இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடுகிறது. இன்னொரு பக்கம் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட கரப்பான் பூச்சி கட்சியினர் ரெடியாகி வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து அவர் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கைப்பட எழுதியிருக்கும் இந்த கடிதம் அவரது சோஷியல் மீடியா கணக்கில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.

    Advertisement

    வாங்சுக்

    தான் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள வாங்சுக், தனது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தாலும் தங்கள் கோரிக்கைகளில் எந்த சமரசமும் செய்யப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். தனது உண்ணாவிரதத்தை இன்றே முடித்து கொள்ள ரெடியாக இருப்பதாக கூறியுள்ள வாங்சுக், இருப்பினும் அதற்கு 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார். அந்த கோரிக்கைகளை முன்வைத்தால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடித்து கொள்வேன் என கூறியிருக்கிறார்.

    3 கோரிக்கைகள்

    முதலில் நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வி அமைப்பின் தோல்விகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். இரண்டாவது கோரிக்கையாக, நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வி முறைகேடுகள் தொடர்பான விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப அனைத்து முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் உறுதி அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    Advertisement

    அதேபோல தனது உடல்நிலை காரணமாக இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற முற்றுகை பேரணியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள வாங்சுக், முக்கிய அரசியல் தலைவர்கள் நேரில் மருத்துவமனைக்கு வந்து முதல் இரண்டு கோரிக்கைகளுக்கும் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதையே அவர் 3வது கோரிக்கையாக முன்வைத்துள்ளார். மேலும், கடிதத்தின் இறுதியில் தான் சட்டவிரோதமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

    உண்ணாவிரதம்

    கல்வியாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரான சோனம் வாங்சுக், கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் பல மாற்றங்களை வலியுறுத்திப் பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகிறார். சமீபத்தில் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கரப்பான் பூச்சி கட்சி முன்னெடுத்த போராட்டத்தில் கடந்த ஜூன் 28 முதல் ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

    Advertisement

    உண்ணாவிரதத்தின் 21வது நாளான சனிக்கிழமை அதிகாலை, அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து டெல்லி போலீசார் அவரை ஜந்தர் மந்தர் போராட்ட களத்தில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அதற்கு முந்தைய தினம் தான் அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர். அவரது உயிரைக் காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    டெல்லி நீதிமன்றம்

    இதற்கிடையில் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ, அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நேற்றைய தினம் அவசர வழக்காக இது விசாரிக்கப்பட்டது. இருப்பினும், கீதாஞ்சலி கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அரசு அவரை சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றியது சட்டப்படி சரியான நடவடிக்கையே என்று டெல்லி நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

    English Summary

    Activist Sonam Wangchuk has agreed to end his hunger and announced three key conditions(சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம்): Sonam Wangchuk health latest updates in tamil.