மாணவர்களை விரட்டி வெளுத்த போலீசார்.. உண்ணாவிரதம் தொடரும்! சோனம் வாங்சுக் அதிரடி அறிவிப்பு!

  • டெல்லி: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்யக்கோரி, நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்களும், இளைஞர்களும் இன்று பேரணி நடத்திய நிலையில், அவர்கள் மீது போலீசார் சரமாரியாக தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் சோனம் வாங்சுக், உண்ணாவிரத போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    கடந்த 21 நாட்களாக அவர் தொடர் உண்ணாவிரதம் இருந்த நிலையில், அவரது உடல் நிலை மிகவும் கவலைக்குரியதாக மாறியிருக்கிறது. இதனால் அவர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

    Advertisement

    டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, தனது உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் கையெழுத்து பிரதியில், 3 முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்.

    1. அமைதியான வழியில் போராடும் இளைஞர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும்.
    2. மருத்துவமனையில் இருக்கும் தன்னை சந்திக்க அந்த இளைஞர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்
    3. கல்வியமைச்சர் மீதான குற்றச்சாட்டுகளை மத்திய அரசு நேர்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்

    Advertisement

    என வலியுறுத்தியிருக்கிறார். இந்த கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை தனது உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று அவர் கூறியிருக்கிறார்.

    முன்னதாக இன்று காலை நாடாளுமன்றத்தை நோக்கி ஆயிரக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் திரண்டனர். அவர்கள், போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு தொடர்ந்து முன்னேறினர். இதையடுத்து அவர்களை தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளையும், தடியடியையும் நடத்தியிருந்தனர். இதன் காரணமாக டெல்லி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

    தடியடியில் ஏராளமான மாணவர்கள் காயமடைந்திருக்கின்றனர். போராட்டக்களத்தில் மாணவர்கள் அமைத்திருந்த கூடாரங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Advertisement

    மதியம் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்திருந்த மாணவர் தலைவர்கள் உடனடியாக தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வலியுறுத்தியிருந்தனர். ஆனால், மத்திய அரசு இப்போது வரை தர்மேந்திர பிரதான் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

    Topics: #students #neet

    English Summary

    Sonam Wangchuk: As students and youths marched towards Parliament today demanding the resignation of Union Education Minister Dharmendra Pradhan, police launched a severe crackdown on them. Condemning this action, Sonam Wangchuk has stated that he will not call off his hunger strike.