நாளை நாடாளுமன்றத்தை நிச்சயம் முற்றுகையிடுவோம்.. சோனம் வாங்சுக் மனைவி உறுதி!

  • டெல்லி: நீட், சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்றும், முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியிருந்தார். தற்போது அவர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கும் நிலையில், நாளை திட்டமிட்டபடி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடக்கும் என்று அவரது மனைவி உறுதியாக கூறியிருக்கிறார்.

    Advertisement

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில், தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி போராட்டம் தொடங்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்தவர்தான் சோனம் வாங்சுக்.

    Advertisement

    ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லாது கரப்பான் பூச்சி கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டத்தையும் தொடங்கினார். 21 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை வலுக்கட்டாயமாக அவர் போலீசாரால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இப்படி இருக்கையில் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜூலை 20(நாளை) நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்படுமா? என்கிற கேள்வி எழுந்தது.

    இதற்கு பதிலளித்த வாங்சுக்கின் மனைவி, திட்டமிட்டபடி பேரணி நடக்கும் என்று கூறியிருக்கிறார்.

    English Summary

    Sonam Wangchuk: Social activist Sonam Wangchuk had launched a hunger strike demanding measures to prevent irregularities in NEET and CBSE exams and insisting that Union Education Minister Dharmendra Pradhan resign, taking responsibility for the malpractices. Although he has now been forcibly moved to a hospital, his wife has firmly stated that the planned protest to lay siege to Parliament will take place tomorrow as scheduled.