ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்

  • டெல்லி: டெல்லியில் ஜூன் 8ம் தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணிக் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு திமுக உடனான உறவை முறித்துக் கொண்ட காங்கிரஸ், தற்போது விஜய் தலைமையிலான தவெகவுடன் கைகோர்த்துள்ளது. இந்த அதிரடி மாற்றம் திமுகவை ஓரங்கட்டி, விஜய்யை தேசிய அரசியலின் முக்கிய முகமாக மாற்றும் காங்கிரஸின் புதிய வியூகமாகப் பார்க்கப்படுகிறது...!!

    Advertisement

    ஜூன் 8ம் தேதி நடைபெற உள்ள இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், இந்திய அரசியலில் குறிப்பாக தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல்முறையாகக் கூடும் இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட 15 முக்கிய கட்சிகள் பங்கேற்க உள்ளன. ஆனால், இந்த கூட்டத்தின் ஒட்டுமொத்த கவனமும் தமிழகத்தின் புதிய அரசியல் மாற்றத்தின் மீதுதான் திரும்பியுள்ளது. இதற்கு காரணம் முதலமைச்சர் விஜய்.

    தவெக காங்கிரஸ்

    சமீபத்தில் முடிவடைந்த தமிழக தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களில் அபார வெற்றி பெற்று, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் ஆதரவுடன் புதிய கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. இந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுக தலைமையிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கைகோர்த்தது.

    Advertisement

    இதன் தொடர்ச்சியாக ஜூன் 8ம் தேதி டெல்லி கூட்டத்திற்கு தவெகவுக்கு காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்துள்ள நிலையில், திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    தேசிய அரசியலில் விஜய்

    இந்த அழைப்பின் மூலம் தவெக தலைவர் ஜோசப் விஜய், மாநில அரசியலைத் தாண்டி தேசிய அரசியலுக்குள் மிக வலுவாக நுழைந்துள்ளார் என்பதை மறுக்க முடியாது.

    மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான ஒரு பலமான பிராந்திய முகமாக விஜய்யை முன்னிறுத்த காங்கிரஸ் முயல்கிறது. தவெகவின் இந்த தேசிய நுழைவு, அக்கட்சிக்கு மிகக் குறுகிய காலத்தில் ஒரு தேசிய அங்கீகாரத்தையும், அகில இந்திய அளவிலான அரசியல் செல்வாக்கையும் தேடித்தரும்.

    Advertisement

    அதேநேரம், காங்கிரஸை பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய அரசியல் பலம் என்றே சொல்லலாம்.. வட மாநில சட்டசபை தேர்தல்களில் திமுகவின் சனாதன எதிர்ப்புப் பேச்சுகளால் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்ததாகக் கடுமையான அதிருப்தி நிலவியது. அது இந்தியா கூட்டணிக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழகத்தில் செல்வாக்குமிக்க விஜய்யை தன்பக்கம் இழுத்ததன் மூலம், திமுகவின் பிடியிலிருந்து காங்கிரஸ் முழுமையாக விடுபட்டுள்ளது.

    நிரந்தர முறிவு

    அதாவது தமிழகத்தில் ஒரு வலுவான மாற்று சக்தியைக் கண்டறிந்துவிட்ட திருப்தியில் காங்கிரஸ் உள்ளது.... ஆனால், இந்த அதிரடி மாற்றங்களை ஆளும்கட்சியான பாஜக மிக உன்னிப்பாகவே கவனித்து வருகிறது.

    Advertisement

    தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள இந்த நிரந்தர முறிவு, திமுகவை தேசிய அளவில் பலவீனப்படுத்தும் என்பது பாஜகவின் கணிப்பாக உள்ளது. இருந்தாலும் விஜய்யின் தவெக சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி ஆகிய கொள்கைகளைத் தீவிரமாகப் பேசுவதால், அது பாஜகவின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது.

    திமுகவுக்கு டார்கெட்

    அதனால் காங்கிரஸ்-தவெக கூட்டணியை தமிழகத்தில் எதிர்கொள்ள பாஜக தனது உத்திகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிகிறது.. குறிப்பாக, காங்கிரஸ் இல்லாத புதியதொரு கூட்டணியை உருவாக்க திமுக முயன்றால், அது எதிர்க்கட்சி வாக்குகளைப் பிரித்து தனக்கு சாதகமாக அமையுமா என்ற கோணத்திலும் பாஜக நிச்சயம் வியூகம் வகுக்கும்.

    Advertisement

    மொத்தத்தில் 8ம் தேதி டெல்லியில் நடக்க போகும் கூட்டம், வெறும் இந்தியா கூட்டணியின் ஆலோசனை மட்டுமல்ல, அது திமுகவை ஓரங்கட்டி விஜய்யை தேசிய அரங்குக்குக் கொண்டு வரும் காங்கிரஸின் மெகா பிளான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்...!!

    English Summary

    Stalin Sidelined as Rahul Gandhi Embraces Vijay? The Master Plan Behind the Political Move