KN Nehru: நீங்க சாதாரண நபர் கிடையாது, வழக்கை சந்தித்தே ஆகனும்! கேஎன் நேரு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

  • டெல்லி: ரூ.634 கோடி லஞ்ச புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் கே என் நேரு விசாரணையை எதிர்கொண்டே ஆக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.634 கோடி முறைகேடு புகாரில் தன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்த தடை விதிக்கக் கோரி கே என் நேரு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    Advertisement

    முன்னதாக சென்னை உயர் நீதிமன்றம் ரூ.634 கோடி லஞ்ச புகாரில் கே என் நேரு மீது விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டு இருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கே என் நேரு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் விரைவில் கே என் நேரு கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    Advertisement

    உச்ச நீதிமன்றத்தில் மனு

    திமுக முன்னாள் அமைச்சர் கே என் நேரு அமைச்சராக இருந்தபோது, நகராட்சித்துறையில் நடந்த 2,538 பணியிடங்கள் நியமனத்தில் ரூ.634 கோடி லஞ்சப்பணம் கைமாறியுள்ளதாக அமலாக்கத்துறை தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது. இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய கேஎன் நேருவை விசாரிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சென்னை உயர் நீடிமன்றம் உத்தரவிட்டது

    சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கே என் நேரு தரப்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே என் நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கே என் நேரு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    Advertisement

    கே என் நேரு தரப்பு வாதம்

    இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கே என் நேரு தரப்பில், "இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் அமைந்திருக்கிறது. மேலும் சென்னை உயர் நீதிமன்றம் தனக்கு இந்த விவகாரத்தில் போதுமான வாய்ப்பை எங்கள் தரப்பு நியாங்களாக முன்வைக்க வழங்கவில்லை.

    கேஎன் நேருவுக்கு மட்டுமல்ல.. பிரதர்ஸுக்கும் சிக்கல்! அதிரடியாக ஹைகோர்ட் போட்ட ஆர்டர்! இறுகும் பிடி!

    அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் தான் லஞ்ச ஒழிப்புத் துறை இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. என்னென்ன ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன போன்ற எந்த விவரங்களையும் என்னிடம் தெரிவிக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் ஆரம்பக்கட்டத்தில் தனக்கு எதிராக தெரிவித்த கருத்து என்பது தனக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்து இருக்கிறது.." என்று வாதிடப்பட்டது.

    Advertisement

    நீங்க சாதாரண நபர் கிடையாது

    இந்த வாதங்களை எல்லாம் ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "நீங்கள் ஒன்றும் சாதாரண நபர் கிடையாது. ஒரு துறையின் முன்னாள் அமைச்சராக இருந்தவர். அந்த துறையில் கிட்டத்தட்ட இவ்வளவு கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக விசாரணை அமைப்புகள் வழக்கு பதிவு செய்திருக்கின்றன. நீங்கள் ஆரம்பக் கட்டத்திலேயே உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருக்க வேண்டும்.

    வழக்கை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்

    ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் உங்கள் வழக்கை ரத்து செய்ததற்கு நீங்க சீராய்வு மனு தாக்கல் செய்தீர்கள். அதில் உங்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட்டது. அதை எல்லாம் அலசி ஆராய்ந்து தான் சென்னை உயர் நீதிமன்றம் உங்கள் மனுவை நிராகரித்துள்ளது.

    Advertisement
    K N Nehru: 170 ஆவணங்கள்.. கே என் நேரு வீட்டில் நடந்த சோதனையில் சிக்கியது என்ன? லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

    எனவே இந்த வழக்கில் மேற்கொண்டு உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஒன்றும் இல்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். மேலும் நீங்கள் ஒரு அமைச்சராக இருந்து இருக்கிறீர்கள். உங்களுக்கு எதிரான வழக்கு என்றால் அதனை அணுகி தான் ஆக வேண்டும். விசாரணைக்கு உட்பட தான் வேண்டும். என்று கூறினர்.

    English Summary

    KN Nehru: The Supreme Court has ordered that former DMK minister K. N. Nehru must face an investigation regarding a bribery allegation involving Rs. 634 crore. K. N. Nehru had filed a petition in the Supreme Court seeking a stay on the case registered against him by the Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) concerning the alleged Rs. 634 crore irregularity; however, the Supreme Court has dismissed this petition.