வாய் பேசி வாங்கி கட்டிக்கொண்ட.. தேர்தல் ஆணையம்! தலையில் கொட்டிய உச்சநீதிமன்றம்!

  • டெல்லி: நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் தொடர்பான பஞ்சாயத்துதான் பெரும் பிரச்சனையாக போய்க்கொண்டிருக்கிறது. நிலைமை இப்படி இருக்கையில் வழக்கு விசாரணை ஒன்றில் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

    Advertisement

    அதாவது வாக்கு மறு எண்ணிக்கையின் அசல் வீடியோ பதிவை கண்டறிய முடியவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதை கேட்ட நீதிபதிகள் உச்சக்கட்ட டென்ஷன் ஆகியிருக்கின்றனர்.

    Advertisement

    கர்நாடக மாநிலத்தின் சிருங்கேரி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவர் டிடி.ராஜேகவுடா வெற்றிப்பெற்றார். ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவின்படி தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை நடந்தபோது, ஜீவராஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்து ராஜேகவுடா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் மறு எண்ணிக்கை முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து, ராஜேகவுடாவின் எம்எல்ஏ பதவியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

    இப்படியாக தேர்தல் முடிவுகள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் டிடி.ராஜேகவுடா மற்றும் பாஜகவின் டி.என்.ஜீவராஜா ஆகிய இருவருக்கும் இடையே சட்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதி சஞ்சய் குமார் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    Advertisement

    அப்போது வாக்கு மறு எண்ணிக்கையின் அசல் வீடியோவை நீதிபதிகள் தாக்கல் செய்ய கேட்டனர். ஆனால், அந்த வீடியோவை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் கூறினார். இதை கேட்ட நீதிபதிகள் ரொம்பவே டென்ஷனாகிவிட்டனர். இப்படி மொக்கையான பலவீனமான சாக்கு போக்கை சொல்லாதீர்கள் என்று நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் வாதங்களை நிராகரித்தனர். அடுத்த விசாரணையின்போது அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கடுமையான முடிவை எடுக்க வேண்டி வரும் என்று எச்சரித்தனர்.

    தேர்தல்களை நடத்தும் ஒரு மிக முக்கிய அரசியலமைப்பு அமைப்பான தேர்தல் ஆணையம், அதன் முதன்மை பொறுப்பான வாக்கு மறுஎண்ணிக்கையின் முக்கிய மின்னணு ஆதாரத்தை (வீடியோவை) எப்படி தொலைக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. இத்தகைய முக்கிய ஆவணங்கள் காணாமல் போனால், ஆவண பாதுகாப்பில் முறையான ஒழுங்கு இல்லை என்றே அர்த்தம் என நீதிமன்றம் கடுமையாக கூறியிருக்கிறது.

    English Summary

    Supreme Court: Controversies surrounding the Election Commission are currently a major issue across the country. Amidst this situation, the Supreme Court has strongly reprimanded the Election Commission during the hearing of a case.