FIR-ல் விஜய் பெயரே இல்லை! அவர் கரூர் போனால் என்ன தவறு! காப்பிய படிச்சீங்களா? நீதிபதிகள் கண்டனம்

  • டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் திமுக அரசு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயர் சேர்க்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டிய உச்சநீதிமன்றம், கரூர் சம்பவம் குறித்து முதல்வரும் அமைச்சர்களும் பேச தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

    Advertisement

    கரூர் வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் விஜய் பெயரே இல்லாத போது அவர் கரூர் செல்வதில் என்ன பிரச்சினை என்றும் கரூர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்புகளை தவெக அரசு வழங்கினால் எந்த வகையில் கரூர் வழக்கை பாதிக்கக் கூடும் என பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், ஆவணங்களை படிக்காமலேயே திமுக வழக்கறிஞர் வாதிடுகிறாரா?

    Advertisement

    கரூர் வழக்கு குறித்து விஜய்யும் அமைச்சர்களும் பேசத் தடை கேட்பதன் மூலம் பேச்சுரிமைக்கு தடை கோருகிறீர்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    மேலும் இந்த வழக்கின் வாதத்தின் போது முதல்வர் விஜய் குற்றஞ்சாட்டப்பட்டவர் (அக்யூஸ்டு) என திமுக வழக்கறிஞர் கூறியதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. முதல்வரின் பயணத்தை நீதிமன்றம் எவ்வாறு முறைப்படுத்த முடியும்? நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்திப்பது எவ்வாறு சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக அமையும்? என்றும் திமுகவிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

    விசாரணையின் நிறைவாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதல்வர் விஜய் நேரில் சந்திப்பதும் அவர்களது குடும்பங்களுக்கு அரசு பணியை வழங்குவதும் வழக்கு விசாரணையை திசை திருப்பும் செயலாகாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

    Advertisement

    எனவே திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் திரும்பப் பெறுமாறு கூறிய உச்சநீதிமன்றம் ஒருவேளை திரும்ப பெறாவிட்டால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படும் என எச்சரித்தது.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் சென்ற போது அவரை பார்ப்பதற்காக ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 41 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அப்போதைய திமுக அரசு தலா 10 லட்சமும், தவெக சார்பில் தலா 20 லட்சமும் நிவாரணம் வழங்கப்பட்டது.

    இந்த சம்பவம் நடந்து 9 மாதங்களாகியும் விஜய் கரூருக்கு செல்லவே இல்லை. தேர்தல் பிரச்சாரத்திற்கும் செல்லவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து ஆறுதல் கூறினர்.

    Advertisement

    சட்டசபை தேர்தலில் வென்று விஜய் முதல்வரானதால் அவர் கரூர் செல்வார் என எதிர்பார்க்கப்பப்டது. அந்த வகையில் அவர் வரும் 10 ஆம் தேதி கரூர் செல்வதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக முதல்வர் விஜய் சந்திப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தமிழக முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சாட்சிகளை கலைக்கும் வகையில் பேசுவதாகவும் அவர்கள் கரூர் வழக்கு குறித்து பேச தடை விதிக்கவும் கோரியிருந்தார்.

    Advertisement

    மேலும் ஜூலை 10ஆம் தேதி முதல்வர் விஜய், கரூரில் உள்ள 41 பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து அரசாணைகள், கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை வழங்கவுள்ளதாக மனுவில் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டிருந்தார்.

    இந்த கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணையில் நிலுவையில் இருக்கும் நிலையில் இது போல் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்புகளை கொடுத்தால் அது அந்த வழக்கின் நகர்வை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

    அது போல் ஜூலை 2 ஆம் தேதி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பனையூரில் நடந்த ஒரு விழாவில் திமுகதான் போலீஸாரை ஏவி கொன்றதாகவும் அவர் பேசியுள்ளார். இது போன்று சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேச தடைவிதிக்க வேண்டும் என்றும் ஒரு மனு தொடரப்பட்டது.

    Advertisement

    இந்த மனு நீதிபதிகள்கேவி விஸ்வநாதன், அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வில் அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது. அது போல் ஆதவ் அர்ஜுனா கரூர் வழக்கில் திமுகவை குற்றம்சாட்டி பேசியதற்கு தடை விதிக்கவும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கிலும் அது போல் தடை போட முடியாது என மறுத்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

    English Summary

    Supreme court judges says Vijay name is not in FIR of Karur Stampede case. Then Why shouldn't he goes to Karur?