தேர்தல் ஆணையர் ஞானேஷ் மகள் வழக்கு.. விசாரணையை மியூட் செய்த உச்ச நீதிமன்றம்.. இதுதான் நீதியா?

  • டெல்லி: டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் சட்டவிரோதமாகக் கைது செய்ததாகக் கூறி, உத்தரப் பிரதேச மாநிலம் கவுதம் புத் நகர் மாவட்ட ஆட்சியர் மேதா ரூபம் ஐஏஎஸ் மற்றும் பிற காவல் அதிகாரிகளின் மாத சம்பளத்திலிருந்து தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வசூலிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    Advertisement

    இந்த உத்தரவை எதிர்த்து மாவட்ட ஆட்சியர் மேதா ரூபம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது, நீதிமன்றக் காட்சிகளின் நேரலையை உடனடியாக முடக்கிய உச்ச நீதிமன்றம், அதன் ஆடியோவையும் 'மியூட்' செய்ய உத்தரவிட்டு வழக்கில் தனது தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

    Advertisement

    மேதா ரூபம் ஐஏஎஸ், நாட்டின் தலைமை தேர்தல் ஆணையரான ஞானேஷ் குமாரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

    டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் பட்டம் பெற்ற ஆக்ரிதி சவுத்ரி என்ற மாணவி, நொய்டாவில் நடைபெற்ற தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது வன்முறை மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் நடந்ததாகக் கூறி, கடந்த ஏப்ரல் 12 அன்று அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீது கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டது.

    இந்த விவகாரத்தை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் செப்டம்பர் 2 அன்று வழங்கிய உத்தரவில்:

    Advertisement

    மாணவி ஆக்ரிதி சவுத்ரி மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது முற்றிலும் சட்டவிரோதமானது என்று கூறி அவரது தடுப்புக் காவலை ரத்து செய்து, உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது.

    மாணவிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும், அந்தத் தொகையை வழக்கின் ஆரம்ப அறிக்கையைத் தயாரித்த காவல் நிலைய அதிகாரி தொடங்கி, தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்த மாவட்ட ஆட்சியர் மேதா ரூபம் வரையிலான அனைத்து பொறுப்பு அதிகாரிகளின் சொந்த மாத சம்பளத்தில் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் மிகக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்தது.

    Advertisement

    உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் காரசார வாதம்

    அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவுக்கு எதிராக ஆட்சியர் மேதா ரூபம் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

    அவருக்காக ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், "நான் நொய்டா மாவட்ட ஆட்சியர் மேதா ரூபத்திற்காக ஆஜராகிறேன். சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உரிய முன்னறிவிப்பு (Notice) கூட வழங்கப்படாமல் அவர் மீது இத்தகைய கடுமையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு, ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்வது வேறு; ஆனால் அந்த உத்தரவைப் பிறப்பித்த நிர்வாக அதிகாரியைக் குற்றவாளியாகச் சித்தரித்துத் தண்டிப்பது முற்றிலும் வேறு விஷயம்."

    Advertisement

    மேலும், மாவட்ட ஆட்சியர் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாக நிர்வாக ரீதியாகப் பல்வேறு நிலைகள் மற்றும் ஆய்வுகள் உள்ளன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

    உத்தரப் பிரதேச மாநில அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதிடுகையில்:

    மாணவி ஆக்ரிதி முதலில் மானேசர் பகுதியிலும், பின்னர் நொய்டாவிலும் போராட்டங்களில் ஈடுபட்டார். சாலை மறியல், தீவைப்பு மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.

    அவர் ஏப்ரல் 12 அன்று கைது செய்யப்பட்டார். காவல் நிலைய ஆய்வாளர் நிலையிலிருந்து முன்மொழியப்பட்டு, ஆட்சியர் பிறப்பித்த பிறகு, நீதிபதி தலைமையிலான ஆய்வுக் குழு மற்றும் மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதலுக்குப் பிறகே இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதில் ஆட்சியர் ஒரு நபர் மட்டுமே.

    Advertisement

    மாணவி ஏப்ரல் 11 மாலையே வாட்ஸ்அப் தகவல்களுக்குப் பதிலளிக்கவில்லை என்ற காரணத்தை மட்டுமே வைத்து அவர் ஏப்ரல் 11 அன்றே கைது செய்யப்பட்டுவிட்டார் என்று உயர் நீதிமன்றம் தவறான முடிவுக்கு வந்துள்ளது. கைது செய்யப்பட்டு ஒரு மாதம் கழித்தே தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் சட்டம் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது.

    நேரலை முடக்கம் மற்றும் தீர்ப்பு ஒத்திவைப்பு

    இந்த வழக்கின் விசாரணையின்போது, பொதுமக்களும் வழக்கறிஞர்களும் காணொலி காட்சி வாயிலாகப் பார்க்கும் காணொலி இணைப்பைத் துண்டித்து, ஆடியோவையும் உச்ச நீதிமன்றம் முடக்கியது. தேர்தல் ஆணையரின் மக்கள் என்பதால் இந்த கரிசனம் காட்டப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதையடுத்து, ஆட்சியர் மேதா ரூபத்தின் சம்பளத்திலிருந்து ரூ.5 லட்சம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை கோரிய மனு மீதான தனது இறுதி உத்தரவை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

    English Summary

    Supreme Court Mutes Hearing on CEC Gyanesh Kumar’s Daughter Medha Roopam’s Plea