டெல்லி: இந்தியாவில் ஜனநாயகத்தின் மிக முக்கிய அடித்தளமாக விளங்குவது வாக்குரிமை. 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமையை நமது அரசமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ளது. ஆனால், புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப் பயன்படும் விண்ணப்பப் படிவமான 'படிவம் 6' (Form 6)-ல் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சில ரகசிய மாற்றங்கள், இப்போது உச்ச நீதிமன்றத்தின் விசாரணை வரம்பிற்குள் வந்து பெரும் அரசியல் மற்றும் சட்டப் புயலைக் கிளப்பியுள்ளன.
இந்திய தேர்தல் ஆணையத்தில் அண்மைக்காலமாக எழுந்துள்ள மோதல் தொடர்பாகத் தொடரப்பட்ட மனுக்கள் மீது, உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய வாக்காளர் சேர்க்கைக்கான படிவம் 6 மாற்றம் தொடர்பாக மிக முக்கியமான ஒரு விளக்கத்தையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரண்டு ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் கருத்துகளைக் கேட்காமல் தனிச்சையாக முடிவுகளை எடுக்கிறார் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், "செய்தித்தாளில் வெளியான செய்திகளை மட்டுமே அடிப்படையாக வைத்து நாங்கள் எந்தவொரு நேரடி உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் பதிலை நாங்கள் கேட்க வேண்டும்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். விசாரணையின் போது தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர்களைப் பதிவு செய்யப் பயன்படுத்தும் "படிவம் 6" மாற்றப்பட்டது குறித்த சர்ச்சை எழுந்தது. வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தப் பணிகளின் போது, இந்த படிவத்தில் விதிகளுக்கு மாறாகப் புதிய நிபந்தனைகள் சேர்க்கப்பட்டதாக மற்ற இரு ஆணையர்களும் முன்னதாக ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். இந்த மாற்றத்திற்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்துவிட்டதாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அமர்வு நேரடியாகப் பதிலளித்து, "மாற்றப்பட்ட படிவம் 6-க்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்" என்று திட்டவட்டமாக அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வ வரம்பை மீறி படிவத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதா என்பது குறித்து நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது. இதன் மூலம் தேர்தல் ஆணையம் கோர்ட்டில் பொய் சொன்னது அம்பலம் ஆகி உள்ளது. இந்த வழக்கு சாதாரண வாக்காளர்களை எப்படி பாதிக்கிறது? படிவம் 6-ல் நடந்தது என்ன? தேர்தல் ஆணையத்தில் ஏன் இத்தனை பெரிய சர்ச்சை எழுந்துள்ளது? என்பதை விரிவாகப் பார்ப்போம். இந்தியாவில் புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பம்தான் 'படிவம் 6'. 18 வயது நிரம்பிய ஒரு இளைஞரோ அல்லது இதற்கு முன் வாக்காளராகப் பதிவு செய்யாத ஒரு குடிமகனோ, தனது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க இந்த படிவத்தையே பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். தனிப்பட்ட விவரங்கள்: பெயர் (ஆங்கிலம் மற்றும் மாநில மொழியில்), பாலினம், பிறந்த தேதி. இவ்வளவு எளிதாக இருந்த இந்த நடைமுறையில்தான் கடந்த சில மாதங்களாக தேர்தல் ஆணையம் திடீரென ஒரு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையம் கொண்டு வந்த புதிய நிபந்தனை என்ன? வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் 'சிறப்புத் தீவிர திருத்தப் பணி' (என்ற பெயரில் தேர்தல் ஆணையம் படிவம் 6-ல் ஒரு புதிய விதியைக் கொண்டுவந்தது. அதன்படி, புதிதாகப் பதிவு செய்ய வரும் இளம் வாக்காளர்கள் தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டியின் பெயர்கள், அவர்கள் இதற்கு முன் வாக்களித்த வாக்குச்சாவடி எண்கள், வாக்காளர் வரிசை எண்கள் போன்ற பழைய வரலாற்று விவரங்களைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற புதிய பகுதி இணைக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் இதனை "வாக்காளர்கள் சுயமாக அளிக்கும் விருப்ப விவரம் மட்டுமே" என்று பொதுவெளியில் விளக்கியது. ஆனால், இணைய வழியில் விண்ணப்பிக்கும் போது, அந்த குடும்ப விவரங்களைப் பூர்த்தி செய்யாமல் புதிய வாக்காளர்களால் விண்ணப்பத்தையே அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவோ, சமர்ப்பிக்கவோ முடியாதபடி இணையதளத்தில் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் குடும்பத்தின் பழைய வாக்குப்பதிவு ஆவணங்களை உடனடியாகப் பெற முடியாத பல லட்சக்கணக்கான 18-20 வயதுடைய இளம் தலைமுறை புதிய வாக்காளர்கள் விண்ணப்பிக்க முடியாமல் முடங்கிப் போகும் சூழல் உருவானது. இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்திற்குள் பெரும் பிளவை ஏற்படுத்தியது. இந்திய தேர்தல் ஆணையம் என்பது தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் கொண்ட ஒரு கூட்டு அமைப்பாகும். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எடுத்த இந்தத் தன்னிச்சையான முடிவுக்கு, ஆணையத்தின் மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் மிகக் கடுமையான ஆட்சேபனைகளைத் தெரிவித்தனர். "அரசமைப்புச் சட்ட விதிகளுக்குப் புறம்பாக, தேர்தல் ஆணையத்தின் முறையான அனுமதியோ அல்லது சட்டத் திருத்தமோ இன்றி இணையதளத்தில் செய்யப்பட்ட இந்த மாற்றம் சட்டவிரோதமானது" என்று அவர்கள் பலமுறை அதிகாரப்பூர்வமாக சுட்டிக்காட்டினர். விவகாரம் ஊடகங்களில் கசிந்து பொது விவாதமாக மாறியதும், வேறு வழியின்றி தேர்தல் ஆணையம் முழு ஆணையக் கூட்டத்தைக் கூட்டியது. தீவிர திருத்தப் பணிகள் முடிவடைந்த அல்லது தொடங்கப்படாத மாநிலங்களில் மட்டும் இணையதளத்தில் இருந்த அந்தக் கட்டாயக் குடும்ப விவரப் பிரிவை தேர்தல் ஆணையம் நீக்கியது. இருப்பினும், தீவிர திருத்தப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் மாநிலங்களில் இந்தப் புதிய நிபந்தனைகள் தொடர்ந்து நீடித்து வந்தன. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்ற ஆணையர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறார் என்றும், படிவம் 6 மாற்றத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன என்றும் குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில், "படிவம் 6-ல் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்துவிட்டது" என்ற தொனியில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. "மாற்றியமைக்கப்பட்ட படிவம் 6-க்கு நாங்கள் எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை. இதனை நாங்கள் மிகத் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறோம். ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் போது, இந்த படிவத்தை சட்ட விதிகளுக்கு மாறாக மாற்றியது யார் என்பதை நாங்கள் ஆராய்வோம்" என்று குறிப்பிட்டார். தலைமை தேர்தல் ஆணையரை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற இடைக்காலக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டாலும், தன்னிச்சையாகப் படிவத்தை மாற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும் அதிகாரப்பூர்வ நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. நாட்டின் உச்சபட்ச நீதிமன்றமான உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான போக்கிற்கு எதிராகத் தெளிவான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் என்பவர் முழு அமைப்பின் சர்வாதிகாரி அல்ல; அவர் மற்ற ஆணையர்களுடன் கலந்தாலோசித்து, ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோதான் முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற ஜனநாயக விதி மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் குடிமகனுக்கு மிக எளிதாகக் கிடைக்க வேண்டிய வாக்குரிமைப் பதிவை, தேவையற்ற நிபந்தனைகள் மூலம் கடினமாக்க யாருக்கும் அதிகாரமில்லை என்பதை இந்த விசாரணை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது."செய்தித்தாளை மட்டும் வைத்து முடிவெடுக்க முடியாது"
தேர்தல் ஆணையம் கோர்ட்டில் பொய் சொன்னது
படிவம் 6 (Form 6) என்றால் என்ன?
வழக்கமாக இந்த படிவத்தில் ஒரு குடிமகன் அளிக்க வேண்டிய விவரங்கள் மிக எளிமையானவை:
சான்றாவணங்கள்: பிறந்த தேதி மற்றும் முகவரிக்கான சான்றிதழ்கள்.
தொடர்பு விவரங்கள்: தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, விருப்பத்தின் பேரில் ஆதார் அட்டை விவரங்கள்.
உறுதிமொழி: தான் ஒரு இந்தியக் குடிமகன் என்றும், வேறு எந்தப் பகுதியிலும் வாக்காளராகப் பதிவு செய்யவில்லை என்றும் கையொப்பமிட்டுத் தரப்படும் சுய பிரகடனம்.தேர்தல் ஆணையத்துக்குள் வெடித்த உள்ளக மோதல்
உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?
இதனைக் கேட்ட தலைமை நீதிபதி சூர்யா காந்த் மிகக் காட்டமாக ஒரு விளக்கத்தை அளித்தார்:
இந்த வழக்கின் முக்கியத்துவம் என்ன?