ராங் நம்பருக்கு கூட போராட்டம்.. எதுக்கு வழக்கு எல்லாம் போடறீங்க.. தலைமை நீதிபதி சொன்ன பாயிண்டு

  • டெல்லி: இந்தியாவில் தற்போது போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வரும் சூழலை உச்ச நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் இடஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளைச் சுழற்சி முறையில் மாற்ற வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தை நாடிய மனுதாரர் போராட்டம் நடத்தாமல் ஏன் வந்தார் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

    Advertisement

    நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கு தனி தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்த தொகுதிகளில் மற்ற பிரிவினர் போட்டியிட முடியாது. இதற்கிடையே இந்த தனி தொகுதிகளை சுழற்சி முறையில் மாற்ற வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    Advertisement

    ராங் நம்பருக்கும் போராட்டம்!

    தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அப்போது இது போராட்டங்களின் சீசன் என்றும் ஏன் நீதிமன்றங்களை நாடினீர்கள் என்றும் அவர் நகைச்சுவையாக கருத்து தெரிவித்தார். தலைமை நீதிபதி மேலும், "நீங்கள் ராங் நம்பருக்கு போன் செய்துவீட்டீர்கள் போல.. இது போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கான காலம். நீங்களும் போராட்டத்தையே நடத்தியிருக்கலாம்" என்று குறிப்பிட்டார். இதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தனக்கு போராட்டம் நடத்தும் எண்ணம் இல்லை என்றும், தொண்டை வலியும் இருப்பதாகவும் பதிலளித்தார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தின் 191கடிபூர் சட்டசபை தொகுதி வாக்காளரான ஜகதீஷ் சிங் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். 1952ஆம் ஆண்டு முதல் அந்த தொகுதி தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் நான்கு அல்லது ஐந்து குடும்பங்கள் மட்டுமே பலனடைந்துள்ளதாக கூறிய அவர், குறைந்தபட்சம் சட்டசபை தொகுதிகளுக்கான இடஒதுக்கீட்டிலும் சுழற்சி முறையை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

    Advertisement

    உள்ளாட்சி தேர்தல்

    உள்ளாட்சி தேர்தல்களில் ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு ஏற்கெனவே இத்தகைய சுழற்சி முறை நடைமுறையில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். தொகுதிகளை சுழற்சி முறையில் மாற்றி அமைக்காமல் இருப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி ஜாய்மால்யா பாக்சி, பெரும்பாலான மக்கள் தங்கள் சாதியினருக்கே வாக்களிப்பார்கள் என்று கருத முடியாது என்றார். மேலும், தொகுதி இடஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், ஒருவரின் வாக்குரிமை பாதிக்கப்படுவதில்லை என்றும் விளக்கினார்.

    வாக்களிக்கும் உரிமை

    அவர் மேலும், "நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. உங்கள் சமூகத்தை சேர்ந்த வேட்பாளருக்கு வாக்களிக்க முடியவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. மேலும், நீங்களும் இட ஒதுக்கீடு இல்லாத வேறு தொகுதிகளிலும் போட்டியிடலாம்" என்று கூறினார். பல கட்சிகள் உள்ள ஜனநாயக நாட்டில்.. வாக்காளர்கள் சாதியை விட கட்சி மற்றும் அதன் கொள்கைகளின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

    Advertisement

    மறுப்பு

    மேலும், சுழற்சி முறையில் தனித்தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் தலையிட நீதிமன்றம் மறுத்தது. அரசியலமைப்பின் 332வது பிரிவு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான தொகுதி இட ஒதுக்கீட்டை வழங்குவதாகவும், எந்த தொகுதியை ஒதுக்குவது என்பது வேறு தனி விவாதம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதை மதிப்பிட வேண்டியது சட்டசபையின் பொறுப்பு என்றும் இதற்காக ஏற்கனவே உள்ள சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

    English Summary

    Chief Justice Surya Kant jokingly asked a petitioner why he approached the Supreme Court instead of staging a protest(போராட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம்): Supreme Court on Protests latest news in tamil.