ராகுல் காந்தியை கடுமையாக கண்டித்த உச்ச நீதிமன்றம்! கண்டிப்பாக விளக்கம் கொடுக்க வேண்டும் என காட்டம்

  • டெல்லி: ராகுல் காந்தி உள்ளிட்டோர் எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணியாக சென்றது தொடர்பாக வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதித்துறையை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது என்றும், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி தனது விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் டெல்லியில் கடந்த சில நாட்களாக பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். ஜனாதிபதியை சந்தித்தும் முறையிட்டனர்.

    Advertisement

    அதேபோல, உச்ச நீதிமன்றம் நோக்கி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய எம்பிக்கள் பேரணியாக சென்றனர். எதிர்க்கட்சி எம்பிக்களின் போராட்டத்தால் டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள் போடப்பட்டன. இதற்கிடையே, வழக்கறிஞர்கள் நான்கு பேர், ராகுல் காந்தியின் பேரணி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

    அப்போது, ராகுல் காந்தி நடந்து கொண்ட விதம் குறித்து தங்களின் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி தனது விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும், நீதித்துறையை யாரும் மிரட்டி பணியவைக்க முடியாது என்றும் தலைமை நீதிபதி கூறினார்.

    Advertisement
    ரபேல் ஒப்பந்தம்: என்ன பேச்சு பேசுனீங்க.. மன்னிப்பு கேளுங்க.. ராகுல் காந்திக்கு பாஜக கிடுக்கிப்பிடி

    இதற்கிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, இந்தியா கூட்டணி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசிஆகியோர் தனித்தனியாக மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    மேலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இது தொடர்பாக கூறியதாவது:- "நோட்டீஸ் அனுப்புகிறோம் என்பதற்காக எதையும் கண்டிப்பதாக அர்த்தமல்ல. ஆனால், அதற்கு முன்பாக ஒரு ஆட்சேபனை உள்ளது. அடுத்த விசாரணையின்போது மனுதாரர்களில் ஒருவரின் செயல்பாடு குறித்து அவரிடம் விளக்கம் கேட்க விரும்புகிறோம்" என்றார்.

    Advertisement
    “போலீசார் சொல்வதை கிளிப்பிள்ளை போல வந்து சொல்லக்கூடாது”- அரசு வழக்கறிஞர்களுக்கு ஐகோர்ட் கிளை அறிவுரை

    ராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம் தலைமை நீதிபதி இந்த கருத்தை தெரிவித்தார். மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் மூத்த வழக்கறிஞர் கவுரவ் பாட்டியா கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற பேரணி குறித்து நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர். அப்போது மேற்கூறிய கருத்தை தலைமை நீதிபதி கூறினார்.

    English Summary

    Supreme Court: A case was filed in the Supreme Court regarding the march led by Rahul Gandhi and others to the Supreme Court premises to submit a notice concerning the 'SIR' (Special Investigation/Inquiry-related) issue. In this matter, the Supreme Court has stated that no one can intimidate or coerce the judiciary, and has directed Rahul Gandhi to provide his explanation regarding the incident.