“24 மணி நேரம் தாண்டி ஒருவரை போலீஸ் காவலில் வைத்திருக்கக் கூடாது” - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

  • டெல்லி: கைது செய்யப்பட்ட நபர்களை 24 மணி நேர வரம்பை தாண்டி காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூடாது என்றும், அவ்வாறு வைத்திருந்தால் உடனடியாக அவர்களை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Advertisement

    நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படாமல் 24 மணி நேரத்திற்கும் மேலாக காவலில் வைத்திருக்கக்கூடாது என்றும், தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    Advertisement

    மேலும், தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரை நீதிபதி முன் ஆஜர்படுத்துவதற்கான காலக்கெடு, அவர் தடுத்து வைக்கப்பட்ட கணத்திலிருந்தே தொடங்குகிறது என்றும், கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து நீதிபதி நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான பயண நேரத்தைத் தவிர, 24 மணி நேரக் காலக்கெடுவைக் கணக்கிடும்போது வேறு எந்தக் கால அளவையும் விலக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

    “உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்” - பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    சட்டத்திற்கு புறம்பான தடுத்து வைப்புகளை தடுக்கும் வகையிலும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விதிகளை அனைத்து மாநில காவல்துறையும் பின்பற்ற வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    English Summary

    Supreme Court has ruled that a person detained for more than 24 hours without being produced before a magistrate must be released forthwith, reiterating that the deadline for producing a detained person before a magistrate begins from the moment of detention.