நெல்லை கவின் வழக்கு... சுர்ஜித்தின் பெற்றோரை விடுவித்தது செல்லும்.. தமிழக அரசின் மனு தள்ளுபடி

  • டெல்லி: நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கவின் ஆணவப் படுகொலை வழக்கில், கைது செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணகுமாரி மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒரு கிரிமினல் வழக்கு எப்படி கையாளப்படக் கூடாதோ அவ்வாறு கையாளப்பட்டிருக்கிறது எனக்கூறி தமிழ்நாடு அரசின் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்திருக்கிறார்கள்.

    Advertisement

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் கவின். பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவர், பாளையங்கோட்டையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ். சுபாஷினியை காதலித்து வந்தார். இருவரும் காதலித்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி கவின், சுபாஷியினி தம்பியனா சுர்ஜித்தால படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் தொடர்பாக சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித்தை போலீசார் கைது செய்தனர்.

    Advertisement

    இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சுர்ஜித்தின் நெருங்கிய உறவினர் ஜெயபால் கைது பெற்றோர்களான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதில் சரவணனும், கிருஷ்ணகுமாரியும் காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். சிறையில் இருந்த காரணத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். அதன்பின்னர் குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

    முன்னதாக திருநெல்வேலியில் உள்ள வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், காவல் துறை அதிகாரிகளான குற்றஞ்சாட்டப்பட்ட சரவணனும் கிருஷ்ணகுமாரியும் தங்கள் மகளுக்கும் கவினுக்கும் இடையேயான காதலை 2016-17 முதல் அறிந்திருந்தனர் என்றும் சரவணன் தனது மகளை எச்சரித்ததுடன், 2018-19 காலப்பகுதியில் கவினிடமும் தொலைபேசியில் பேசியுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

    Advertisement

    அதேபோல் கவினின் தாயை, காவல் அதிகாரியும், சுர்ஜித்தின் அம்மாவுமான கிருஷ்ணகுமாரி தொடர்புகொண்டு எச்சரித்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆனால், பெண்ணின் பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கும் அவர்களது மகன் சுர்ஜித்துக்கும் இடையே நடந்ததாக கூறப்படும் சந்திப்பையோ உரைடாயலையோ நிரூபிக்க நேரடி சாட்சிகளோ தடயங்கலோ இல்லை என்று என்று கூறிய உயர்நீதிமன்றம், சரவணன், கிருஷ்ணகுமாரிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை டந்த செப்டம்பர் 20ம் தேதி ரத்து செய்தது. அரசுத் தரப்பு சமர்ப்பித்த ஆதாரங்கள், அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தவில்லை என்று நீதிபதி ஆர். விஜயகுமார் குறிப்பிட்டார். மேலும், அந்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

    Advertisement
    மதுரை, திருச்சி, நெல்லை போறீங்களா? நீங்க சென்னையில் எந்த இடத்துல பஸ் ஏறணும்? முழு லிஸ்ட் இதோ

    இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், வழக்கில் காவல் அதிகாரிகள் கண்டறிந்த பல்வேறு அம்சங்களையும் சென்னை உயர்நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் குற்றப்பத்திரிகையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் ஒரு கிரிமினல் வழக்கு எப்படி கையாளப்படக் கூடாதோ அவ்வாறு கையாளப்பட்டிருக்கிறது என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

    English Summary

    The Supreme Court dismissed the appeal filed by the TN government against the Madras High Court Madurai Bench's order, which had quashed the chargesheet against the sub-inspector and his wife—parents of the girl—in the shocking Kavin honor killing case in Thoothukudi. The judges dismissed the Tamil Nadu government's petition, observing that the case was handled in a manner that exemplifies how a criminal case should not be handled.