கொலை வழக்கில் ஆயுள் தண்டனை.. 105 வயதில் விடுதலை செய்த உச்ச நீதிமன்றம்! நீதிபதிகள் சொன்ன காரணம் என்ன?

  • டெல்லி: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 30 ஆண்டுகள் சிறையில் இருந்த 105 வயது முதியவரை தண்டனை காலம் முடியும் முன்பே உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. 1994-ல் தனது 74-வது வயதில் சிறைக்கு சென்ற மேற்கு வங்கத்தை சேர்ந்த ரசிக் மண்டலுக்கு 2024 ஆம் ஆண்டு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் இனி அவர் சுதந்திர மனிதனாக வாழலா என்று கூறிவிடுவித்தது.

    Advertisement

    கடந்த 1920 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் உள்ள மல்டா மாவட்டத்தில் பிறந்த ராசிக் சந்திரா மோண்டல் என்பவர் தனது 68 -வது வயதில் கொலை வழக்கில் சிக்கினார். 1988 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சிக்கிய மோண்டலுக்கு எதிரான வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கில் அவருக்கு எதிரான குற்றங்கள் நிரூபணம் செய்யப்பட்டது.

    Advertisement

    உச்ச நீதிமன்றமும் நிராகரித்தது

    இதையடுத்து, 1994 ஆம் ஆண்டு குற்றவாளி என மோண்டலை அறிவித்த நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. தனக்கு விதித்த தண்டனையை எதிர்த்து மோண்டல் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், மோண்டலின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டினார் மோண்டல்.

    ஆனால் அங்கும் அவருக்கும் நிவாரணம் கிடைக்கவில்லை. 2020 ஆம் ஆண்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 99 வயதில் தனக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதாகவும் இதனால் முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில், மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    Advertisement

    105 வயதில் விடுதலை

    இந்த நிலையில்தான், 105 வயதில் அவரை சிறையில் இருந்து விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் ஜோய்மால்யா பகாச்சி மற்றும் வி மோகனா அமர்வு அவரை விடுதலை செய்தது. 1988 ஆம் ஆண்டு முதல் சட்ட போராட்டம் நடத்தி வந்த மோண்டல் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையில் கழித்த நிலையில், 105 வயதில் சிறையில் இருந்து வெளியே வந்து இருக்கிறார்.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில், "மனுதாரரின் வயதை கருத்தில் கொண்டு இந்த வழக்கை முடித்து வைக்கிறோம். அவரது ஆயுள் தண்டனை முடிவுக்கு வராவிட்டாலும், அவர் இனி மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டிய அவசியம் இல்லை. கடந்த 2024 ஆம் ஆண்டு இடைக்கால ஜாமீன் உத்தரவை இறுதியான உத்தரவாக மாற்றுவதாகவும் கூறினர்.

    English Summary

    Supreme Court ordered the release of a 105-year-old man—who had served 30 years of a life sentence for murder—before the completion of his term. Rasik Mandal, a native of West Bengal who was imprisoned in 1994 at the age of 74, was granted bail by the Supreme Court in 2024 and allowed to live as a free man.