மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- நாளை கூடுகிறது உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு!

  • டெல்லி: மத்திய அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க, உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நாளை (அக்.11) ஞாயிறு அன்று கூடுகிறது. CJP போராட்டத்தை தடுக்க, நீதிமன்ற உத்தரவையும் மீறி டெல்லி மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டதாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

    Advertisement

    டெல்லி போலீசாரின் கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி தாக்கல் செய்த இந்த மனுவையும் சேர்த்து, நாளை அவசர வழக்காக விசாரிக்கிறது உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு.

    Advertisement

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது, காவல்துறை இந்த போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்தது. முன்னதாக இந்தப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கக்கோரியும், கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நேற்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அமைதியான வழயில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளதாகவும், ஆனால் அனுமதியின்றி போராட்டம் நடத்துவது சட்டவிரோதமானது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதேவேளையில், மொட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்படுவது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும், அனைத்தையும் முடக்கி பொதுமக்களுக்கு எந்தப் போக்குவரத்து வசதியும் இல்லாமல் செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்தனர்.

    Advertisement

    இந்நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தை தடுக்க, நீதிமன்ற உத்தரவையும் மீறி டெல்லி மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

    அபிஜித் தீப்கே வீட்டில் சோகம்.. கைதுக்கு நடுவே மகாராஷ்டிராவில் பாட்டி திடீர் மரணம்.. என்ன நடந்தது?

    மேலும், சிஜேபி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் டெல்லி விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டனர். சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர்கள் சவுரவ் தாஸ், ஆசுதோஷ் ரங்கா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மும்பையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை டெல்லி வந்தடைந்தனர்.

    Advertisement

    விமானம் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தை வந்தடைந்ததும், விமானத்துக்குள் சென்ற டெல்லி போலீசார் அவர்களை விமானத்துக்குள் வைத்தே கைது செய்தனர். எனினும், அவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர் என்பது குறித்த தகவல் இல்லை. எனவே, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவும் நாளை சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வருகிறது.

    English Summary

    A special bench of the Supreme Court will convene tomorrow (Sunday, Oct. 11) to hear a contempt of court case against the Union Government. The case alleges that transport services, including the Delhi Metro, were suspended in violation of a court order in an effort to block the CJP protest.