பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார்

  • டெல்லி: பாஜகவில் இருந்து அதன் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விலகுவதாக அறிவித்தார். இதற்கான 5 பக்கங்கள் கொண்ட விலகல் கடிதத்தை பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து அவர் அளித்துள்ளார். மேலும் தான் ஏன் விலகுகிறேன் என்ற காரணத்தையும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    அண்ணாமலையை பாஜகவிலேயே தக்க வைத்துக் கொள்ள நிறைய முயற்சிகள் எடுக்கப்பட்டும் அது எதுவுமே கைகொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இறுதியாக நிதின் நபினிடம் அண்ணாமலை விலகல் கடிதத்தை அளித்துவிட்டார்.

    Advertisement

    இதையடுத்து சென்னை வரும் அண்ணாமலை நாளை மறுநாள் செய்தியாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அண்ணாமலையின் அடுத்த திட்டம் குறித்து தெரியவரும். அவர் வேறு கட்சியில் இணைய வாய்ப்பில்லை என்கிறார்கள். எனவே அவர் புதிய கட்சியை தொடங்குவார் என தகவல்கள் கிடைத்துள்ளன.

    தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, அந்த கட்சியை பட்டித் தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்தார். "என் மண் என் மக்கள்" எனும் யாத்திரை மூலம் பாஜகவை அனைத்து தரப்பினரும் அறிய செய்தார். அது வட இந்திய கட்சி அல்ல, தமிழகத்தில் அந்த கட்சிக்கென ஒரு பெரிய கட்டமைப்பே இருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் செயல்பட்டார்.

    Advertisement

    இதையடுத்து அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்ததாலும், 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க டெல்லி தலைமை விரும்பியதாலும் அதற்கு குறுக்கே இருந்த அண்ணாமலையை தலைவர் பதவியிலிருந்து விடுவித்துவிட்டு தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனை டெல்லி பாஜக கொண்டு வந்தது.

    கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அண்ணாமலை 4 பாஜக எம்எல்ஏக்களை சட்டசபைக்கு அனுப்பினார். ஆனால் நயினார் நாகேந்திரன் தலைமையிலான பாஜக இந்த 2026 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஒரே ஒரு எம்எல்ஏவுடன் சட்டசபைக்குள் நுழைந்துள்ளது.

    Advertisement

    அரசியல் பார்வையாளர்கள் நிறைய பேர் பாஜகவின் படுதோல்விக்கு பிறகாவது அண்ணாமலையை மீண்டும் தலைவராக்கினால் இனி வரும் காலங்களிலாவது தமிழகத்தில் எங்காவது சில இடங்களில் தாமரையை மலர வைக்க முடியும் என அறிவுறுத்தி வருகிறார்கள்.

    நயினாருக்கு பாஜக தலைவர் பதவி கொடுத்ததும் அண்ணாமலை தேசிய அரசியலுக்கு கொண்டு செல்லப்படுகிறார் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். ஆனால் அவருக்கு எந்த பதவியும் இதுவரை வழங்கப்படவில்லை. அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை. குறைந்தபட்சம் அவரது ஆதரவாளர்களுக்கு கூட பாஜக தலைமை சீட் கொடுக்கவில்லை.

    இதனால் தொடர்ந்து அண்ணாமலை தொடர் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அண்ணாமலை பால் பண்ணை வைக்க போகிறார், விவசாயம் செய்ய போகிறார் என்றெல்லாம் கூறி வந்த நிலையில் தற்போது புதிய இயக்கத்தை தொடங்க போவதாக பலர் தகவல்களை தெரிவித்து வருகிறார்கள்.

    Advertisement

    அதை உறுதிப்படுத்தும் வகையில் "தமிழகத்தை தலைமை ஏற்க வா" என அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டன. இந்த நிலையில் அதிருப்தியுடன் எதற்காக கட்சியில் நீடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த அண்ணாமலை தேசிய பாஜக தலைவர் நிதின் நபினை சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.

    ஆனால் நேற்று வரை அவரை சந்திக்க அண்ணாமலைக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. எனினும் அண்ணாமலை டெல்லி சென்றதும் அவர் நிதினை சந்திக்க நேரம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் நிதினை இன்று காலை அண்ணாமலை சந்தித்து ஆலோசனை செய்தார். அப்போது தான் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் நிதினிடம் அவர் முன் வைத்துள்ளாராம்.

    Advertisement

    5 பக்க கடிதத்தில் அண்ணாமலை பல்வேறு விவகாரங்களை விவரித்துள்ளாராம். தேர்தல் படுதோல்விக்கு என்ன காரணம் என்பதையும் அவர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் தன்னை தமிழக பாஜகவில் வேண்டுமென்றே சிலர் ஓரங்கட்டுவதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளை டெல்லி பாஜக தலைமை சரி செய்யுமா இல்லை கண்டுகொள்ளாமல் விடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English Summary

    Reports suggest that former Tamil Nadu BJP president K. Annamalai is set to meet BJP national leader Nitin Nabin today, amid speculation that he may submit a resignation letter and step away from the party. The unconfirmed reports have triggered widespread discussion and political curiosity across Tamil Nadu.