தமிழகத்தின் இருமொழி கொள்கைக்கு ஆபத்தா? நவோதயா பள்ளி வழக்கில் 3 மாத கெடு விதித்த உச்ச நீதிமன்றம்

  • டெல்லி: நவோதயா பள்ளிகளுக்கு நிலங்களை கண்டறிய தமிழக அரசுக்கு மூன்று மாதங்கள் உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. நவோதயா பள்ளிகள் தொடங்குவது கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பை வழங்கும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவினை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    Advertisement

    அப்போது, தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளுக்கான நிலங்களை கண்டறிய மேலும் 3 மாத அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்க்கு விசாரணையின் போது தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

    நவோதயா பள்ளிகளை அமைப்பதில் தமிழக அரசுக்கு என்ன சிக்கல்? மொழி சார்ந்த விஷயங்களில் மனநிலை மாற வேண்டும். அரசு மாறியிருப்பதால், மனநிலையிலும் மாற்றம் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    நவோதயா பள்ளி விவகாரத்தில் தமிழக அரசு தரப்பு விடாப்பிடியாக இருக்கிறது. இந்தி திணிப்பு மட்டும் தான் நவோதயா பள்ளிகளை எதிர்ப்பதற்கான காரணமா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜெகதீஷ் குப்தா ஆஜராகி வாதிட்டார். அவர் வாதிடும் போது, ஒவ்வொரு மாநிலத்திற்கும் கல்வி கொள்கை உண்டு. தமிழ்நாட்டில் நவோதயா பள்ளி அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது.

    Advertisement

    நவோதயா பள்ளிகளை தொடங்குவது மாநில அரசின் கொள்கைக்கு முரணானது என்று வாதிட்டார். நவோதயா பள்ளி வழக்கில் நிலங்களை கண்டறிய மூன்று மாதம் உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வரும் இருமொழிக்கொள்கைக்கு ஆபத்து வருமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 14 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    இந்தியாவிலேயே நவோதயா பள்ளிகள் ஒன்று கூட இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே ஆகும். தமிழகம் பின்பற்றி வரும் இருமொழிக்கொள்கைக்கு மாறாக மூன்றாவது மொழி, அதாவது இந்தியை திணிக்கும் வகையில் இருப்பதால் நவோதயா பள்ளிகளுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    English Summary

    Is the two-language policy at risk? Supreme Court grants Tamil Nadu government three months' time in the Navodaya school case. Establishing Navodaya schools will provide educational opportunities to poor rural students. Supreme Court grants an additional three months to identify land for setting up Navodaya schools.