டாடா சன்ஸ் தலைவர் பதவி: புதிய ட்விஸ்ட்! சந்திரசேகரனுக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு ஏன்? என்ன நடந்தது?

  • டெல்லி: டாடா குழுமத்தின் தலைமை நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து என் சந்திரசேகரன் விலகுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியான நிலையில், இன்று நடைபெற்ற போர்டு கூட்டத்தில் அவரது பதவி காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    டாடா அறக்கட்டளைகளின் தலைவரான நோயல் டாடாவின் கருத்துக்கு எதிராக, இயக்குநர் குழுவில் இருந்த மற்ற உறுப்பினர்கள் வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    மேலும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு

    இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமாக டாடா உள்ளது. கார் உற்பத்தி முதல் ஐடி துறை பல்வேறு துறைகளில் இந்த டாடா குழுமம் கோலோச்சி வருகிறது. டாடா குழுமத்தின் ஒரு அங்கமான டாடா சன்சின் தலைவாராக சந்திரசேகரன் இருந்து வந்தார்.

    டாடா சன்ஸ் நிர்வாகத்தில், நோயல் டாடா தலைமையிலான டாடா டிரஸ்ட்ஸ், தற்போதைய சேர்மன் என். சந்திரசேகரனின் மூன்றாவது பதவிக்கால நீட்டிப்புக்கு மீண்டும் முட்டுக்கட்டை போட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, தனது பதவியில் இருந்து விலகுவதாக சந்திரசேகரன் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக டாடா சன்ஸ் குழும தலைவராக சந்திரசேகரனுக்கு மேலும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    Advertisement

    3 மணி நேரம் நீடித்த கூட்டம்

    சந்திரசேகரன் பதவி விலகுவதாக அறிவித்ததால் டாடா குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து இருந்தன. இந்த நிலையில், சில வாரங்களில் பல முக்கிய திருப்பங்கள் டாடா நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ளன. டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கும், என். சந்திரசேகரனை டாடா சன்ஸ் தலைவராக மேலும் 5 ஆண்டுகளுக்கு நியமிப்பதற்கும் அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

    டாடா அறக்கட்டளைகளின் தலைவரான நோயல் டாடாவின் கருத்துக்கு எதிராக, இயக்குநர் குழுவில் இருந்த மற்ற உறுப்பினர்கள் வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற இயக்குநர் குழுக் கூட்டம் சுமார் 3 மணி நேரம் நீடித்தது. இந்தக் கூட்டத்தில்தான் சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிக்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    Advertisement

    ஒப்புதல் கிடைக்குமா?

    டாடா அறக்கட்டளைகளின் தலைவர் நோயல் டாடா எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. நோயல் டாடா எதிர்ப்பு இருப்பதால், டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டத்தில் மீண்டும் மோதல் ஏற்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடவும் இயக்குநர் குழு முடிவு செய்துள்ளது.

    எனினும், இந்த முடிவுகளுக்கு டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும். டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா அறக்கட்டளைகள் 66 சதவீதப் பங்கை வைத்துள்ளது. டாடா அறக்கட்டளைகளின் சார்பில் டாடா சன்ஸ் நிறுவன இயக்குநர் குழுவில் வேணு சீனிவாசன் மற்றும் நோயல் டாடா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    Advertisement

    இதில், சந்திரசேகரனின் மறுநியமனம் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடும் முடிவு ஆகியவற்றுக்கு வேணு சீனிவாசன் ஆதரவு தெரிவித்து உள்ளார். ஒருவேளை ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் இந்த முன்மொழிவுகள் நிராகரிக்கப்படும் பட்சத்தில், நிறுவனங்கள் சட்டத்தின்படி மேற்கூறிய முடிவுகளுக்கு ஒப்புதல் கிடைக்காது.

    English Summary

    While an announcement was made last August regarding N. Chandrasekaran stepping down as Chairman of Tata Sons—the holding company of the Tata Group—his tenure has been extended by another five years at the board meeting held today.