தட்கல் புக்கிங் ரூல்ஸ் டூ வங்கி விதிகள் வரை.. ஆகஸ்ட் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்.. என்னென்ன?

  • டெல்லி: இந்தியாவில் ஒவ்வொரு மாதம் முதல் தேதியிலும் எல்.பி.ஜி சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுகிறது. அதேபோல நிதி விவகாரங்களிலும் அவ்வப்போது சில மாறுதல்கள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் என்னென்ன விதிகள் மாறப்போகின்றன என்ற விவரங்களை பார்க்கலாம்.

    Advertisement

    தட்கல் டோக்கன் முறை, சிகேஓய்சி எனப்படும் புதிய பொதுவான வாடிக்கையாளர் அடையாள அமைப்பு, அமெரிக்கா ஈரான் போரால் சிலிண்டர் விலை எப்படி வரப்போகிறது என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

    Advertisement

    தட்கல் டோக்கன் முறை

    ரயில்களில் தட்கல் புக்கிங் செய்வதற்கான விதிகளில் சில முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. அதாவது கவுண்டரில் தட்கல் டிக்கெட் எடுக்கும் போது முன்கூட்டியே லைனில் காத்திருக்க கூடிய பயணிகளுக்கான டோக்கன் சிஸ்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. நீண்ட வரிசையை தவிர்க்கும் வகையில், புக்கிங் நடைமுறைகளை வேகப்படுத்தவும் லைனில் காத்திருப்பதையும் தவிர்க்க டோக்கன் வழங்குவதில் மாறுதல் கொண்டு வரப்படுகின்றன.

    அதாவது, பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் டோக்கன்களை வாங்கி கொண்டு, புக்கிங் தொடங்கும் நேரத்தில் வந்தால் போதும். இது வடமேற்கு ரயில்வே மண்டலத்தில் அமல்படுத்தப்படுகிறது. அனைத்து மண்டலங்களுக்கும் பொருந்தாது. ஏசி தட்கலுக்கான டோக்கன் காலை 8.30 மணி முதல் 9 மணி வரையும், சாதாரண வகுப்புகளுக்கான டோக்கன் காலை 9 மணி முதல் 9.30 மணி வரையும் வழங்கப்படும்.

    Advertisement

    சிலிண்டர் விலை:

    எண்ணய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எண்ணெய் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் எல்பிஜி சிலிண்டர் விலை அப்டேட் ஆகும். மேற்காசிய போரால் தொடர்ந்து உயர்ந்து வந்த சிலிண்டர் விலை ஜுலை 1-ல் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்கா - ஈரான் போர் மீண்டும் வெடித்துள்ள சூழலில் எரிவாயு விலை எந்த மாதிரியாக வரப்போகிறது என்ற கலக்கம் வியாபாரிகள் மற்றும் இல்லத்தரசிகள் இடையே ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான் சிலிண்டர் விலை ரூ.957.50 ஆகவும், வணிக சிலிண்டர் விலை ரூ.3,106 ஆகவும் உள்ளது.

    Advertisement

    சிகேஓய்சி

    வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், 'Central Know Your Customer 2.0' (CKYC 2.0) எனப்படும் புதிய பொதுவான வாடிக்கையாளர் அடையாள அமைப்பை ஆகஸ்ட் மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய நடைமுறையின் படி, வாடிக்கையாளரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், வாடிக்கையாளரின் சரிபார்க்கப்பட்ட KYC விவரங்களை மைய தரவு தளங்களில் இருந்து அணுக முடியும்.

    மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இதில் இணையக்கூடும் என்று கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கி மற்றும் செபி, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆகியற்றுடன் இணைந்து இது செயல்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

    English Summary

    Tatkal booking rules: In India, the price of LPG cylinders is revised on the first day of every month. Similarly, it is common for periodic changes to be made regarding financial matters. In this context, let us look at the rules that are set to change starting August 1st.