திமுக எம்பிக்கள் சொன்ன வார்த்தை.. தமிழ்நாட்டை கிண்டல் செய்த ஆந்திர எம்பி.. இப்படி சொல்லிட்டாரே!

  • டெல்லி: 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் குரல் கொடுத்த நிலையில், ''தமிழ்நாடு எல்லாவற்றையும் தடை செய்ய விரும்புகிறது. அதனால் அனைத்து தொழிற்சாலைகளும் ஆந்திராவிற்கு வருகின்றன. அதற்கு நன்றி'' என்று தெலுங்கு தேசம் கட்சியின் லாவு ஸ்ரீகிருஷ்ணா தேவராயலு சொல்லி சீண்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    நாடாளுமன்றத்தில் பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்)திருத்த மசோதா, 2026 நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம்
    வினாத்தாள் கசிவில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை மற்றும் அபராதத்தை அதிகரிக்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த மசோதாவின் மீது ஒவ்வொரு எம்பிக்களும் பேசினர். இந்த மசோதாவின் மீது ஆந்திராவை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் எம்பியாக இருக்கும் லாவு ஸ்ரீகிருஷ்ணா தேவராயலு பேசினார். அப்போதுஅவர் கூறியதாவது:

    ''என்னுடைய தந்தை ஒரு ஆசிரியர். அவரிடம் நிறைய பேர் வந்து பயிற்சி பெறுகிறார். அந்த பயிற்சிக்காக மாணவர்கள் படும் கஷ்டம், மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் எனக்கு தெரியும். மாணவர்கள் தினமும் 15 முதல் 16 மணிநேரம் வரை படிக்கின்றனர். நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் அதற்காக 4 முதல் 5 ஆண்டுகள் வரை செலவு செய்து பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

    Advertisement

    இப்படி இருக்கும்போது நீட் தேர்வு எழுதிவிட்டோம் என நிம்மதியாக இருந்தபோது அடுத்த 3 நாளில் வினாத்தாள் கசிந்ததும், மறுதேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்புகளை அவர்களை பாதிக்கும் வகையில் இருந்தது. இருப்பினும் மத்திய அரசு வினாத்தாள் கசிவுக்கு காரணமான 15 பேரை கைது செய்துள்ளது. சீர்த்திருத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த மசோதாவில் இன்னும் கூடுதல் அம்சங்களை சேர்க்க வேண்டும். பொதுதேர்வு வினாத்தாள் கசிவை செய்வோர் மட்டுமின்றி புரளி கிளப்புவோர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படியான அம்சங்களை சேசர்க்க வேண்டும். ஏனென்றால் மாணவர்கள் 7 ம் வகுப்பிலேயே பயிற்சியை தொடங்குகின்றனர்.

    Advertisement

    பயிற்சி மையங்கள் சார்ந்த துறை அடுத்த சில ஆண்டகளில் ரூ.1 லட்சம் கோடி என்ற மதிப்பிற்கு வளரும். இதனால் தேசிய அளவில் பயிற்சி மையத்துக்கான கொள்கைகளை வகுக்க வேண்டும். ஏனென்றால் கல்வி, பயிற்சி உள்ளிட்டவை தரமாகவும், குறைந்த செலவிலம், அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். அதேபோல், வினாத்தாள் கசிவை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைத்தல், புதிய சட்ட திருத்த மசோதா மூலமாக அபராதம், தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மசோதாவை வரவேற்கிறோம்'' என்றார்.

    இந்த வேளையில் எம்பி லாவு ஸ்ரீகிருஷ்ணா தேவராயலு பேசும்போது திமுக எம்பிக்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினர். இதனை பார்த்த எம்பி லாவு ஸ்ரீகிருஷ்ணா தேவராயலு, ''தமிழ்நாடு எல்லாவற்றையும் தடை செய்ய விரும்புகிறது. அதனால் அனைத்து தொழிற்சாலைகளும் ஆந்திராவிற்கு வருகின்றன. அதற்கு நன்றி'' என்றார்.

    English Summary

    Amidst calls by DMK MPs in Parliament for the cancellation of the NEET exam, a provocative remark by Telugu Desam Party's Lavu Sri-Krishna Devarayalu-"Tamil Nadu wants to ban everything; that is why all the industries are coming to Andhra Pradesh. Thank you for that"-has sparked a stir.