லேப்டாப் லாக் அவுட்.. ID முடக்கம்.. ஒரே நாளில் 550 இந்தியர்கள் வேலை பறிப்பு! என்ன தான் நடக்கிறது

  • டெல்லி: அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்றில் வேலை செய்த இளைஞருக்கு நேற்று மிக பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முதலில் அலுவலக லேப்டாப்பில் அவரது ஐடி லாக் அவுட் ஆன நிலையில், பிறகு ஐடியும் முடக்கப்பட்டது. என்ன நடக்கிறது என்று புரிவதற்குள், வேலை பறிபோனதாக அவருக்கு மெயில் வந்துள்ளது. சுமார் 550 பேருக்கு இதுபோல ஒரே நாளில் வேலை பறிபோய் இருக்கிறது.

    Advertisement

    இப்போது ஐடி மார்கெட் வேகமாக மாறி வருகிறது. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பம் வந்த பிறகு நாம் யோசிக்காத பல மாற்றங்கள் குறுகிய காலத்தில் நடந்து வருகிறது. இதனால் வேலையிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுவும் ஒவ்வொரு நிறுவனத்திலும் பல நூறு பேர் வரை வேலை இழக்கிறார்கள். அப்படி தான் இப்போதும் நேற்று அலுவலகத்தில் வழக்கம்போல வேலையை தொடங்கிய ஊழியர்கள், சில மணி நேரங்களிலேயே தங்கள் வேலை இழந்துள்ளனர்.

    Advertisement

    வேலையிழப்பு

    அமெரிக்காவை சேர்ந்த டேட்டா இன்ஜினியரிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு சர்வீஸ் நிறுவனமான இன்னோடேட்டா (Innodata) என்ற நிறுவனத்தில் தான் இது நடந்துள்ளது. இந்த நிறுவனத்தில் இந்திய பிரிவில் வேலை செய்தவர்களில் மட்டும் சுமார் 550 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மட்டுமின்றி பிலிப்பைன்ஸ் நாட்டிலும் ஊழியர்கள் வேலை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

    நேற்று திங்கட்கிழமை வழக்கம்போல் வேலைக்கு சென்ற 28 வயது இளைஞருக்கு, மதியத்துக்கு பிறகு அதிர்ச்சி காத்திருந்தது. முதலில் அலுவலக லேப்டாப்பில் அவர் லாகின் ஆகியிருந்த நிலையில், அது தானாக லாக் அவுட் ஆகியிருக்கிறது. பின்னர், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஐடியும் முடக்கப்பட்டது. என்ன நடக்கிறது என்று புரிவதற்குள், வேலை பறிபோனது தொடர்பான மெயில் அவரது பெர்சனல் மெயில் ஐடிக்கு வந்தது.

    Advertisement

    550 வேலை போச்சு

    இது இவருக்கு மட்டும் நடந்தது இல்லை.. இன்னோடேட்டாவில் இந்தியா பிரிவில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் இதே தான் நடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் சுமார் 550 ஊழியர்கள் வேலையை இழந்ததாக கூறப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி பிலிப்பைன்ஸிலும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மாலைக்குள் சுமார் 500 பேர் கொண்ட வாட்ஸ்அப் குழு உருவாகியிருந்தது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, தங்களுக்கும் வேலை பாதிப்பு ஏற்படுமோ என்று கவலைப்பட்டவர்களும் அதில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, துல்லியமாக எத்தனை பேருக்கு வேலை போனது என்பது தெளிவாக தெரியவில்லை.

    Advertisement

    உலகம் முழுவதும்

    குறிப்பிட்ட பிஸ்னஸ் குறைவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது. மேலும், நிறுவனத்துக்கு சொந்தமான லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை ஊழியர்கள் திருப்பி ஒப்படைத்த பிறகு, ஊதியம் மற்றும் செட்டில்மெண்ட் முழுமையாக வழங்கப்படும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Innodata நிறுவனம்

    இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் பணிநீக்கங்கள் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. 1988ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த Innodata நிறுவனம், டேட்டா சேவைகள் வழங்கும் அமெரிக்க நிறுவனம். 2025 டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, உலகம் முழுவதும் இந்நிறுவனத்தில் 10,107 ஊழியர்கள் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள், மைக்ரோசாஃப்ட், அமேசான், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களை இது தனது வாடிக்கையாளர்களாக கொண்டிருந்தது. அப்படிப்பட்ட மெகா நிறுவனத்திலேயே இந்த வேலை நீக்கம் நடந்துள்ளது.

    English Summary

    US-based data engineering and AI services company Innodata has reportedly laid off around 550 employees in India in a single day(டெக் துறையில் இந்தியா வேலையிழப்பு): Tech Layoffs latest news in tamil.