நாங்கள் இந்த உலகத்தை விட்டு போகிறோம்! மேனேஜருக்கு மெயில் அனுப்பிவிட்டு.. IT ஊழியர் எடுத்த முடிவு!

  • டெல்லி: ஐடி துறையில் சம்பளம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ.. அதே அளவுக்கு மன உளைச்சலும் அதிகம். இப்படி இருக்கையில் டெல்லி குருக்ராமில் ஐடி ஊழியர் ஒருவர் அவரது மனைவியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    உயிரிழந்தவர்கள் உயிரிழந்தவர்கள் முகமது அஸ்லம் மற்றும் அவரது மனைவி ஃபர்ஹானா என்றும், இவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் எனவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

    அஸ்லம் என்ஐடி காலிகட் மற்றும் ஐஐஎம் இந்தூர் ஆகிய புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்தவர்.இவர்கள் பெங்களூரில் இருந்து மூன்று மாதங்களுக்கு முன்பு தான் குருக்ரமுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

    குருக்ரம் செக்டார் 68 இல் உள்ள எம்3எம் மெரினா குடியிருப்பு பகுதியில் அவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். இப்படி இருக்கையில் அஸ்லம் தற்கொலைக்கு முன்னதாக, தனது நிறுவனத்திற்கு "நாங்கள் இந்த உலகத்தை விட்டு செல்கிறோம்" என்று மெயில் அனுப்பி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள்.. வீட்டு உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் வீட்டுக்குச் சென்று பார்த்த போதுதான் இந்த சோகம் வெளிச்சத்திற்கு வந்தது.

    அஸ்லாமின் உடல் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவியின் உடல் கழுத்தில் காயங்களுடன் தரையிலும் கிடந்தன. அவரது மனைவியின் பிறந்தநாளன்று இந்த சம்பவம் நடந்திருக்கிறது. மனைவியின் சடலத்தை கைப்பற்றும்போது.. போலீசார் ஒரு விஷயத்தை நோட் செய்து இருக்கிறார்கள். அதாவது அவரது ஆடையில் பேனாவால் 'ஐ லவ் யூ' என்று எழுதப்பட்டிருக்கிறது. அதேபோல நாங்கள் இந்த உலகத்தை விட்டு செல்கிறோம் என்று எழுதப்பட்ட ஒரு கடிதமும் அங்கிருந்து மீட்கப்பட்டிருக்கிறது.

    இவர்கள் இருவருக்கும் இடையே, பெரிய அளவுக்கு குடும்பத் தகராறு எதுவும் இல்லை என்று உறவினர்கள் கூறியிருக்கின்றார். மேலும், அஸ்லம் கடந்த ஒன்றை ஆண்டுகளாக மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஐடி துறையில் அவருக்கு இருந்த கடுமையான வேலைப்பளு.. இந்த மன அழுத்தத்திற்கும் தீவிர முடிவுக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்து இருக்கின்றனர். சம்பவ இடத்திலிருந்து லேப்டாப்கள் மற்றும் மொபைல் ஃபோன்களை பறிமுதல் செய்த போலீசார், பிஎன்எஸ் பிரிவு 103(1)ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English Summary

    Techie: In the IT sector, high salaries often come hand-in-hand with high levels of mental stress. Against this backdrop, an incident in Gurugram, near Delhi—where an IT employee killed his wife and subsequently took his own life—has come as a major shock.