திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம்

  • டெல்லி: நீட் மறுதேர்வு நடக்க இருக்கும் நிலையில், டெலகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்திருக்கிறது. இந்நிலையில் இந்த தடையை விமர்சிக்கும் வகையில் டெலிகிராம் கருத்து தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    நாடு முழுவதும் கடந்த மே மாதம் 3ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால், இந்த தேர்வுக்கான வினாத்தாள் டெலிகிராம் வழியாக லீக் ஆனதால், அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால், லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இப்படி இருக்கையில், ஜூன் 21ம் தேதி நீட் மறுத்தேர்வு நடக்கிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

    Advertisement

    மத்திய அரசின் இந்தத் தடையைக் கிண்டல் செய்யும் விதமாக டெலிகிராம் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளது. “ஒரு வணிக வளாகத்தில் (Mall) திருட்டு நடந்தால், அதற்காக எல்லா வணிக வளாகங்களையும் மூடிவிடுவீர்களா? அல்லது யாராவது ஒருவர் வேகமாக வாகனம் ஓட்டினால், அதற்காகச் சாலைகளையே மூடிவிடுவீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது. இந்த ட்வீட் தற்போது சோஷியல் மீடியாக்களில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

    முன்னதாக மத்திய அரசின் தடை குறித்து டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவ் கூறுகையில், “தேர்வுத் தாள்களைக் கசியவிட்ட நபர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக, இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் அதிகமான சாதாரண பயனர்களை இந்தத் தடை தண்டிக்கிறது. மேலும், இத்தகைய தடைகளால் எதையும் தடுத்துவிட முடியாது. கசிவுகள் மற்ற செயலிகளுக்கு மாறிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    டெலிகிராம் மற்ற மெசேஜிங் ஆப்ஸ்களை விட மாறுபட்டது. வாட்ஸ்அப்பில் ஒரு குரூப் ஓபன் செய்கிறீர்கள் எனில், அதை செய்தது யார்? குரூப்பில் உள்ளவர்களின் மொபைல் நம்பர் என்ன என்பது மற்றவர்களுக்கு தெரியும். மட்டுமல்லாது குறிப்பிட்ட சைஸ் கொண்ட ஃபைல்களை மட்டுமே ஷேர் செய்ய முடியும்.

    ஆனால், டெலிகிராம் கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு குரூப்பை தொடங்கினால் அதில் அதிகபட்சம் 2 லட்சம் பேர் வரை இணைய முடியும். ஆனால், அந்த குரூப்பில் உள்ள ஒருவரின் மொபைல் நம்பரை கூட உங்களால் தெரிந்துக்கொள்ள முடியாது. வெறும் யூசர் ஐடி மட்டுமே இருக்கும். மட்டுமல்லாது 2GBக்கும் அதிகமான ஃபைல்களை கூட ஷேர் செய்ய முடியும். எனவேதான் டெலிகிராமை கன்ட்ரோல் செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது.

    English Summary

    Telegram: With the NEET re-examination approaching, the Central Government has imposed a temporary ban on the Telegram app. Amidst this, a statement issued by Telegram criticizing the ban has sparked a stir.